ராணுவ நிலையங்களை குறிவைத்த பாகிஸ்தான்: முறியடித்த இந்தியா!

Published On:

| By Kavi

இந்தியா பாகிஸ்தான் தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் காஷ்மீரில் ராணுவ நிலையங்கள் மீது பாகிஸ்தான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் கூறுகிறது. pakistan attack indian military stations

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 

ADVERTISEMENT

இதற்கு பதிலடியாக வந்த பாகிஸ்தானிய ஏவுகணையை இந்தியா வான் வழியிலேயே சுட்டு சுக்குநூறாக்கியது. 

இந்த சூழலில் நேற்று(மே 8) இரவு முதல் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. 

ADVERTISEMENT

இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.

“பதற்றங்களை அதிகரிக்கும் வகையில் 8ஆம் தேதி மாலை முதல் இந்தியாவின் மேற்கு எல்லைகளில் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. ஆனால் இந்திய ஆயுதப்படைகள் அவற்றை விரைவாக தடுத்து நிறுத்தியது”என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன. 

ADVERTISEMENT

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள நீலம் ஜீலம் நீர்மின் திட்டத்தை இந்தியா குறிவைத்து தாக்கியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. 

ஆனால் இது ஒரு முழுமையான கட்டுக்கதை என்று வெளியுறவுத் தறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார். 

அதுபோன்று இரவில் ஜம்மு, பதான்கோட், உதம்பூரில் உள்ள ராணுவ நிலையங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும், அதை அனைத்தும் இந்தியா முறியடித்ததாகவும் இதனால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் ராணுவம் தரப்பில் கூறப்படுகிறது. pakistan attack indian military stations

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share