பொதுமக்கள் இருப்பிடங்களில் பாக் தாக்குதல்!

Published On:

| By Kavi

நேற்று இரவு முதல் இந்தியா பாகிஸ்தான் இடையே தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், காஷ்மீரில் உள்ள உரி பகுதியில் பொதுமக்கள் இருப்பிடங்களை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியிருக்கிறது. pakistan attack in kashmir uri

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்திற்கு உட்பட்டு உரி பகுதி உள்ளது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே இந்த பகுதி உள்ளது. 

இந்த நிலையில் இங்குள்ள உணவகம், விடுதிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களை குறி வைத்து பாகிஸ்தான் வீரர்கள் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டிருக்கின்றனர். 

இதனால் உரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பதற்றமான சூழல் ஏற்பட்டிருக்கிறது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்த சூழலில் தற்காப்பு தாக்குதலிலும் பாகிஸ்தான் மீது தீவிர தாக்குதலிலும் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவம், இதுவரை பாகிஸ்தானின் அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது.  pakistan attack in kashmir uri

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share