பாகிஸ்தான் தொடர் தாக்குதல்: மே 15 வரை தற்காலிகமாக மூடப்படும் 32 விமான நிலையங்கள் பட்டியல்!

Published On:

| By Minnambalam Desk

பாகிஸ்தான் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் வடக்கு மற்றும் மேற்கு இந்திய மாநிலங்களின் 32 விமான நிலையங்களில் அனைத்து நடவடிக்கைகளும் தற்காலிகமாக மூடப்படுவதாக இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த 32 விமான நிலையங்களின் அதிகாரிகளும் , தொடர்புடைய விமானப் பணியாளர்களுக்கு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். மே 9, 2025 முதல் மே 14, 2025 வரை (இந்திய நேரப்படி மே 15, 2025 அன்று காலை 05 .29 மணிவரை ) மூடப்படும் விமான நிலையங்களின் விவரம்:

ADVERTISEMENT

  • ஆதம்பூர், பஞ்சாப்
  • அம்பாலா, பஞ்சாப்
  • அமிர்தசரஸ், பஞ்சாப்
  • அவந்திபூர், ஜம்மு காஷ்மீர்
  • பதிண்டா, பஞ்சாப்
  • புஜ், குஜராத்
  • பிகானீர், ராஜஸ்தான்
  • சண்டிகர்
  • ஹல்வாரா, பஞ்சாப்
  • ஹிண்டன், உ.பி
  • ஜெய்சல்மார், ராஜஸ்தான்
  • ஜம்மு, ஜம்மு காஷ்மீர்
  • ஜாம்நகர், குஜராத்
  • ஜோத்பூர், ராஜஸ்தான்
  • கண்ட்லா, குஜராத்
  • காங்ரா (காகல்),இமாச்சல்
  • கேஷோட், குஜராத்
  • கிஷன்கர், ராஜஸ்தான்
  • குல்லு மணாலி (பூந்தர்), இமாச்சல்
  • லே. லடாக்
  • லுதியானா, பஞ்சாப்
  • முந்த்ரா, குஜராத்
  • நாலியா, குஜராத்
  • பதான்கோட், பஞ்சாப்
  • பாட்டியாலா, பஞ்சாப்
  • போர்பந்தர், குஜராத்
  • ராஜ்கோட் (ஹிராசர்), குஜராத்
  • சர்சாவா, உபி
  • சிம்லா, இமாச்சல்
  • ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீர்
  • தோய்ஸ்,லடாக்
  • உத்தர்லாய் , ராஜஸ்தான்

இந்த விமான நிலையங்களில் உள்ள அனைத்து சிவில் விமான நடவடிக்கைகளும் இந்தக் காலகட்டத்தில் நிறுத்தி வைக்கப்படும்.

ADVERTISEMENT

டெல்லி மற்றும் மும்பை விமான தகவல் மண்டலங்களுக்குள் 25 பிரிவுகளின் விமான போக்குவரத்து வழித்தட சேவைகளை தற்காலிகமாக மூடுவதையும் இந்திய விமான நிலைய ஆணையம் நீட்டித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share