இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர்- Operation Sindoor ராணுவ நடவடிக்கை தொடர்பாக ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் ராஜீவ் கய், விமானப்படையின் ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, கடற்படையின் வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் ஆகியோர் இன்று டெல்லி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
- தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது வருத்தம் தருகிறது.
- தீவிரவாதிகளின் கட்டமைப்புகள் மீது மட்டுமே இந்தியா தாக்குதல் நடத்தியது.
- ஆகாஷ் ஏவுகணை மூலம் பாகிஸ்தான் தாக்குதல்களை முறியடித்தோம்
- இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் மூலம் பாகிஸ்தானின் டிரோன்கள் அழிப்பு
- இந்தியாவின் வான் பாதுகாப்பு கட்டமைப்பை மீறி தீவிரவாதிகளால் நுழைய முடியாது
- பாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்தியா நடத்திய தாக்குதலால் அந்நாட்டுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
- இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது
- தீவிரவாதிகள் பிரச்சனையை பாகிஸ்தான் தமது சொந்த பிரச்ச்னையாகவே கருதுகிறது
- தாக்குதல் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் பதிலடி தரப்படும்.

வீடியோ வெளியீடு
இந்த செய்தியாளர் சந்திப்பில், பாகிஸ்தான் விமானப் படை தளங்கள் தாக்கி அழிக்கப்பட்டது தொடர்பான வீடியோக்களும் வெளியிடப்பட்டன.