ஜாபர் ரயிலை கிளர்ச்சியாளர்கள் நிறுத்தியதும் செய்த விஷயம்… பதைபதைக்க வைத்த டிரைவர் வாக்குமூலம்!

Published On:

| By Kumaresan M

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மாகாணத் தலைநகர் குயிட்டாவில் இருந்து பெஷாவர் நோக்கி சென்று கொண்டிருந்த ஜாபர் ரயில் போலான் பஸ் என்ற இடத்தில் வைத்து பலூசிஸ்தான் சுதந்திர ராணுவத்தினரால் கடத்தப்பட்டது.

குயிட்டாவில் இருந்து பெஷாவார் 1612 கி.மீ தொலைவில் உள்ளது. பாபர் எக்ஸ்பிரஸ் 34 மணி நேரத்தில் பெஷாவரை சென்றடையும். ஆனால், கடந்த செவ்வாய்க்கிழமை குயிட்டா ரயில் நிலையத்தில் இருந்து 50 கி.மீ தொலைவில் கிளர்ச்சியாளர்களிடம் சிக்கிக் கொண்டது. Pak Train Driver Recalls Executions

இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவத்தினர் 30 மணி நேரம் கிளர்ச்சியாளர்களுடன் சண்டையில் ஈடுபட்டனர். முடிவில் 21 பயணிகள், 4 பாதுகாப்புப்படையினர் பலியாகினர். 33 கிளர்ச்சியாளர்களும் கொல்லப்பட்டனர். இதற்கிடையே, பயணிகள் மீட்கப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் ராணுவம் பொய் சொல்வதாகவும், தற்போதும் அவர்களுடன் தாங்கள் சண்டையிட்டு வருவதாகவும் பலூசிஸ்தான் சுதந்திர ராணுவம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், பாபர் ரயிலை இயக்கிய லோகோ பைலட் அஜ்மத் நடந்த சம்பவம் குறித்து விளக்கியுள்ளார்.

அவர் ”கிளர்ச்சியாளர்கள் ரயிலை கவிழ்க்க டெட்டனேட்டர் வைத்திருந்தனர். அது வெடித்ததும், ரயில் இன்ஜீன் நின்று விட்டது. உடனே 100க்கும் மேற்பட்டவர்கள் ஜன்னல்களை உடைத்து ரயிலில் ஏறினார்கள். ரயிலில் ஏறியதும் பயணிகளின் சொந்த ஊர், இனம் குறித்து கேட்டு பிரித்தனர். படுகாயமடைந்து மயங்கிய சிலரை அவர் உயிரிழந்துவிட்டதாக நினைத்தனர்.

இந்த ரயிலில் பாகிஸ்தான் ராணுவத்தில் பணி புரிந்தவர்களும் இருந்தனர். அவர்களில் ஒரு சிலரை கீழே இறக்கி தூக்கில் போட்டனர். அவர்கள் மிகுந்த ஆக்ரோஷமாக காணப்பட்டனர். தப்பிக்க முயன்றவர்களை கண்மூடித்தனமாக சுட்டனர். ரயில் பயணிகளுக்கு குடிக்க தண்ணீர் மட்டுமே கொடுத்தனர்” என்று தெரிவித்துள்ளார். Pak Train Driver Recalls Executions

மீட்கப்பட்ட பயணிகள் சிலர் கூறுகையில், ‘ எங்களிடத்தில் பலூச் மொழியில் அவர்கள் பேசினர். அரசு எங்கள் தரப்பு கோரிக்கையை ஏற்கவில்லையென்றால், ரயிலை தீ வைத்து கொளுத்தி விடுவோம் என்றனர். அவர்களுக்கு அவ்வப்போது உத்தரவு வந்ததும், பயணிகளில் யாரையாவது அழைத்து சென்று சுட்டுக் கொன்றனர். எங்களுக்கு இதையெல்லாம் பார்க்கும் போது பதை பதைப்பாக இருந்தது. பலூசிஸ்தானில் வசிப்பவர்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்களை அவர்கள் ஒன்றும் செய்யவில்லை” இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share