ஹெல்த் டிப்ஸ்: உடற்பயிற்சியின்போது வலி ஏற்படுவது ஏன்?

Published On:

| By Selvam

ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் சிலர் கடுமையான உடற்பயிற்சி செய்யும்போது வலியை உணர்வார்கள். இது சாதாரண வலியா அல்லது வேறு பிரச்சினைகளின் அறிகுறியா என எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது? வலி இருக்கும்போது உடற்பயிற்சிகள் செய்வதைத் தொடரலாமா? ஃபிட்னெஸ் பயிற்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

சில நாட்களில் மட்டும் கடுமையான உடற்பயிற்சி செய்வதால் உடல் தசைகளில் வலி ஏற்படுவது சகஜம். அதை ‘சோர்னெஸ்’ என்கிறார்கள்.

மேலும் உடற்பயிற்சி செய்யும்போதே இந்த வலி வராது. ஒருநாள் கழித்துதான் வரும். அதை ‘டிலேடு ஆன்செட் ஆஃப் மஸுல் சோர்னெஸ்’ (Delayed onset muscle soreness (DOMS) என்று சொல்கிறார்கள் ஃபிட்னெஸ் பயிற்சியாளர்கள்.

அதாவது இன்று கால்களுக்கான பயிற்சிகளைச் செய்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். செய்து முடித்த உடனேயே வலி தெரியாது. அன்று மாலை லேசான வலியை உணர்வீர்கள். அடுத்த நாள் டாய்லெட் சீட்டில்கூட உட்கார முடியாத அளவுக்கு கடுமையான வலியை உணர்வீர்கள். அதுதான் ‘சோர்னெஸ்’.

அதுவே வலி என்பது வேறு. உடற்பயிற்சி என்றில்லை, வேறு ஏதேனும் வேலை செய்யும்போதும் உங்கள் உடல் பொசிஷன் சரியாக இல்லாவிட்டாலோ, அடிபட்டாலோ ஏற்படுவதுதான் வலி. அதை உடனடியாக உணர்வீர்கள். உடனே போகவும் போகாது.

அதுவே சோர்னெஸ் என்பது உடனே போய்விடும். வலியாக இருக்கும்பட்சத்தில் அந்தப் பகுதியைப் பயன்படுத்தி வேறு எந்த வேலை செய்தாலும் உங்களுக்கு வலி இருக்கும்.

வலி என்பது சரியான அறிகுறியல்ல. எனவே வலி இருந்தால் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்த்து ஓய்வெடுப்பதுதான் சரியானது.

பொதுவாகவே உடற்பயிற்சி செய்யத் தொடங்கும் முன் ஃபிட்னெஸ் ஆலோசகர் அல்லது மருத்துவரைச் சந்தித்து உங்களுக்கு ஏற்கெனவே இருக்கும் பிரச்சினைகளைச் சொல்லி, உங்களுக்கேற்ற உடற்பயிற்சி பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.

தவிர, உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்த பிறகும் சரியான சாப்பாடும் முறையான தூக்கமும் முக்கியம்.

முதல்நாள் சரியாகச் சாப்பிடாவிட்டாலோ, சரியாகத் தூங்காவிட்டாலோ, சரியாக ஓய்வெடுக்காவிட்டாலோ மறுநாள் வொர்க் அவுட் செய்யவே கூடாது. அது உங்கள் வலியை மேலும் அதிகரிக்கும்.

பல நாள்களாக நீங்கள் சரியான சாப்பாடு, போதுமான தூக்கம் மற்றும் ஓய்வின்றி, கடுமையாக உடற்பயிற்சி செய்தால் ஒருநாள் அது உங்கள் உடலில் அறிகுறிகளைக் காட்டும்.

மற்றபடி எந்த வலியாக இருந்தாலும் அத்துடன் உடற்பயிற்சி செய்யாமல், அது சரியான பிறகு தொடர்வதுதான் பாதுகாப்பானது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

”2026 தேர்தலிலும் அதிமுகவுடன் தான் கூட்டணி” : ஒவைசி சொன்ன காரணம் தெரியுமா?

மைதான் : விமர்சனம்!

”அதிமுகவை மிரட்டி பார்க்கும் வேலை வேண்டாம்” : சிதம்பரத்தில் சீறிய எடப்பாடி

அனிதா சம்பத்துக்கு அடித்த ஜாக்பாட்… என்னன்னு நீங்களே பாருங்க..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share