மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’படை தலைவன்’. padaithalaivan release postponed again
வால்டர், ரேக்ளா படத்தை இயக்கிய அன்பு இயக்கியிருக்கும் இப்படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
இத்திரைப்படம் நாளை (மே 23) வெளியாக இருந்தது. எனினும் திரையரங்கு ஒதுக்கீட்டு சிக்கல்களின் காரணமாக, பட ரிலீசை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக நாயகன் சண்முக பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அனைவருக்கும் வணக்கம், படைத்தலைவன் திரைப்படம் மே 23 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், திரையரங்கு ஒதுக்கீட்டு சிக்கல்களின் காரணமாக, பட வெளியீடு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
புதிய வெளியீட்டு தேதியை விரைவில் உறுதி செய்து, அறிவிக்க உள்ளோம். இந்த இடையூறுக்கு மன்னிக்கவும். உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி” என அவர் பதிவிட்டிருக்கிறார்.