பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர், பொம்மை நாயகி, ப்ளூ ஸ்டார், ஜே. பேபி போன்ற படங்களை தயாரித்து வெற்றி பெற்று ஒரு தயாரிப்பாளராகவும் சினிமாவில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார் இயக்குநர் பா ரஞ்சித்.
தற்போது அடுத்ததாக பப்புவா நியூ கினி நாட்டின் NAFA நிறுவனத்துடன் இணைந்து பா.ரஞ்சித் ஒரு புதிய படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதற்கு Papa Buka என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பிரபல மலையாள இயக்குநர் டாக்டர் பிஜூ இயக்குகிறார்.
நடிகர்கள் ரிதாபரி சக்கரவர்த்தி மற்றும் பிரகாஷ் பாரே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.
இந்தப் படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் தன்னுடைய நீலம் புரொடக்ஷன் மூலம் தயாரிக்கிறார். அவருடன் சிலிக்கான் மீடியா நிறுவனமும் இணைகிறது. இந்த இந்திய நிறுவனங்களுடன் பப்புவா நியூ கினி நாட்டின் நேட்டிவ் ஆர்ட்ஸ் அண்ட் ஃபேஷன் அகாடமி (NAFA) இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.
இந்த அறிவிப்பை முன்னிட்டு படத்தின் ஒரு போஸ்டரையும் படக் குழு வெளியிட்டுள்ளது.
ஒரு வயதான முதியவர், நிறைய கல்லறைகளுக்கு முன் நின்று கொண்டிருப்பது போல் அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த படம் இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானியர்களுக்கு எதிராக பிரிட்டிஷ் மற்றும் ஆங்கிலேய படைகளுடன் இணைந்து போரிட்ட இந்திய வீரர்களை பற்றிய ஒரு புத்தகம் எழுத,
பப்புவா நியூ கினியின் போர்ட் மோர்ஸ்பிக்கு செல்லும் இந்திய வரலாற்று ஆசிரியர்களான ரொமிலா, மற்றும் ஆனந்த் ஆகிய இருவரை பற்றிய கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்குவதாக கூறப்பட்டுள்ளது.
https://twitter.com/beemji/status/1790717278595551545?t=PUN1KCiRe_9JEeB8eMYzzA&s=19
இந்த படத்தின் போஸ்டரை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள இயக்குநர் பா.ரஞ்சித் இந்த படத்தை தயாரிப்பதில் மிக்க மகிழ்ச்சி என்றும், இந்தியா – பப்புவா நியூ கினி இணைந்து தயாரிக்கும் முதல் படம் இது எனவும் அவர் பதிவிட்டு இருக்கிறார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் இருந்து தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள் : செந்தில் பாலாஜி வழக்கு முதல் மழை அப்டேட் வரை!
அதிகரிக்கும் டெங்கு: சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு!