ADVERTISEMENT

சார்பட்டா 2: சந்தோஷ் இசையமைப்பாரா? ட்ரெண்டான வட சென்னை 2…

Published On:

| By Selvam

சார்பட்டா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ள நிலையில், இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

2012-ஆம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக பா.ரஞ்சித் அறிமுகமானார். தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது படங்களை இயக்கினார். இவருடைய அனைத்து படங்களிலும் தலித் வாழ்வியல் மற்றும் சாதி அரசியலை பேசியிருப்பார்.

ADVERTISEMENT

ரஞ்சித் இயக்கத்தில் 2021-ஆம் ஆண்டு வெளியான சார்பட்டா திரைப்படத்தில் ரங்கன் வாத்தியாராக பசுபதி, கபிலனாக ஆர்யா, மாரியம்மாளாக துஷாரா விஜயன், வேம்புலியாக ஜான் கொக்கன், டான்சிங் ரோஸாக ஷபீர் கல்லரக்கல், வெற்றி செல்வனாக கலையரசன், துரைக்கண்ணு வாத்தியாராக சுந்தர் ஆகியோர் நடித்தனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

1970 காலகட்டத்தில் வடசென்னையில் நடைபெற்ற சார்பட்டா, இடியாப்ப பரம்பரை இடையிலான பாக்ஸிங் விளையாட்டை இப்படம் கதைக்களமாக கொண்டிருந்தது.

ADVERTISEMENT

படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஆழமாக வடிவமைக்கப்பட்டதால், மக்களிடம் எளிதாக சென்று தாக்கத்தை ஏற்படுத்தியது.

கொரோனா காரணமாக சார்பட்டா திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. பலரும் சார்பட்டா திரைப்படம் திரையரங்கில் வெளியாகவில்லை என்று சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

ADVERTISEMENT

இந்தநிலையில், சார்பட்டா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை இயக்குநர் பா.ரஞ்சித் நேற்று வெளியிட்டார்.

https://twitter.com/beemji/status/1632749333748543495?s=20

யாரும் இந்த அறிவிப்பை எதிர்பார்க்கவில்லை. இதனால் இந்திய அளவில் ட்ரெண்டானது. பலரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தொடர்ச்சியாக தன்னுடைய 5 படங்களில் பணியாற்றிய சந்தோஷ் நாராயணன், சார்பட்டா திரைப்படத்திற்கு பிறகு ரஞ்சித்துடன் பணியாற்றவில்லை. நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு தென்மா, தங்கலான் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்தனர்.

இதனால் பா.ரஞ்சித்தின் அடுத்த படமான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தன்னுடைய படம் குறித்த அப்டேட் வெளியிட்ட ரஞ்சித், நடிகர் ஆர்யாவை மட்டும் தான் டேக் செய்திருந்தார். சந்தோஷ் நாராயணனை டேக் செய்யவில்லை.

ரசிகர்கள், சந்தோஷ் நாராயணன் தான் சார்பட்டா திரைப்படத்தில் இசையமைக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

சார்பட்டா 2 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி இந்திய அளவில் ட்ரெண்டான வேளையில், வடசென்னை 2 திரைப்படம் ஹேஷ்டேக் ட்ரெண்டானது.

கடந்த 2018-ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் வடசென்னை. இந்த படத்தில் 80-களின் தொடக்கத்தில் வடசென்னையில் நடைபெற்ற கேங் வார் குறித்து எடுக்கப்பட்டிருந்தது. அடுத்த பாகம் விரைவில் வெளியாகும் என்று இயக்குநர் வெற்றி மாறன் தெரிவித்திருந்தார்.

சார்பட்டா படத்தின் 2 பாகம் அறிவிப்பு வெளியானதால், வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அப்டேட் வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள் ஹேஷ்டாக் ட்ரெண்ட் செய்தனர்.

செல்வம்

புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்

மருந்துவாங்க கூட காசு இல்ல…வீடியோ வெளியிட்ட தயாரிப்பாளர்…ஓடி வந்து உதவிய சூர்யா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share