ADVERTISEMENT

தனிச்செயலாளர் தினேஷ் குமார் தந்தை மறைவு: ஸ்டாலின் அஞ்சலி!

Published On:

| By Selvam

முதல்வர் ஸ்டாலினின் தனிச்செயலாளர் தினேஷ் குமாரின் தந்தை டி.வி.ரவி மே 12-ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.

ADVERTISEMENT

இதுகுறித்து தகவல் அறிந்ததும் முதல்வர் ஸ்டாலின் தினேஷ் குமாரை போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், “எனது தனிச் செய­லா­ளர் தினேஷ்­கு­மாரின் தந்­தை­யார் – நாமக்­கல் மாவட்­டம் வெண்­ணந்­தூ­ரைச் சேர்ந்த டி.வி. ரவி நேற்று இரவு மறை­வெய்­திய செய்­தி­யால் வேதனைய­டைந்­தேன்.

தன்னை வளர்த்து, சான்­றோ­னாக்­கிய தந்­தையை இழந்து தவிப்­பது எந்தவொரு மக­னுக்­கும் எளி­தில் ஆற்­றி­விட முடி­யாத துய­ர­மும், ஈடு செய்­து­விட முடி­யாத இழப்­பு­மா­கும்.

ADVERTISEMENT

உயிர்­கொ­டுத்து, உற்­ற­து­ணை­யாய் விளங்­கிய தந்­தையை இழந்து தவிக்­கும் தினேஷ்­கு­மாரின் துய­ரைப் பகிர்ந்­து­கொள்­கி­றேன். அவ­ருக்­கும் அவ­ரது குடும்­பத்­தா­ருக்­கும் உற­வி­னர்­க­ளுக்­கும் நண்­பர்களுக்­கும் எனது ஆழ்ந்த இரங்­க­லை­யும் ஆறு­த­லை­யும் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்” என்று தெரிவித்திருந்தார்.

மறைந்த டி.வி.ரவியின் சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் நேற்று இறுதிச்சடங்கு நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள் மறைந்த டி.வி.ரவியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.  பின்னர் ராசிபுரம் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இந்தநிலையில், தினேஷ் குமாருக்கு ஆறுதல் சொல்வதற்காக முதல்வர் ஸ்டாலின், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி ஆகியோர் இன்று சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் சேலம் சென்றனர்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் உள்ள தினேஷ் குமார் இல்லத்திற்கு சென்று மறைந்த டி.வி.ரவியின் திருவுருவப் படத்திற்கு இருவரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் தினேஷ் குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆன்மீகத்திற்கு எதிரானவனா நான்? – மேடையில் கொந்தளித்த மிஷ்கின்

2,100 கி.மீ டிராவல்: தோனியுடன் போட்டோ… சென்னையில் டென்ட் போட்ட வெறித்தனமான ரசிகர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share