சட்டத்துறையின் முதல் பெண் செயலாளராக ப.சுமதி நியமனம்!

Published On:

| By Kavi

சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக சுமதி நியமனம்  செய்யப்பட்டுள்ளார். 

சட்டத் துறையின் செயலாளராக கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்த  சி.ஜார்ஜ் அலெக்சாண்டர் பணியிலிருந்து 31.05.2026 அன்று ஓய்வு பெற்றார். 

ADVERTISEMENT

அவரது ஓய்வைத் தொடர்ந்து, மாநில சட்ட ஆணையத்தின் முழுநேர உறுப்பினர் செயலாளராக பணியாற்றி வந்த  ப.சுமதி, 02.06.2026 முதல் சட்டத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நியமனத்தின் மூலம் ப.சுமதி சட்டத் துறையின் செயலாளர் பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையைப் பெறுகிறார்.

ADVERTISEMENT

இது சட்டத் துறையின் வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல் என்று அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share