வீடு திரும்பினார் விஜயகாந்த்

Published On:

| By Balaji

கடந்த 11 நாட்களாக சென்னை மியாட் மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த விஜயகாந்த் ஏப்ரல் 2 ஆம் தேதி காலை வீடு திரும்பினார்.

கடந்த மார்ச் 23ஆம் தேதி நள்ளிரவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீரென சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து, தேமுதிக சார்பில் வெளியிட்ட அறிக்கையில், வருடத்திற்கு ஒருமுறை செய்யும் மருத்துவ பரிசோதனைக்காகத்தான் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் ஓரிரு நாட்களில் வீடு திரும்பிவிடுவார், தொண்டர்களும், நிர்வாகிகளும் மருத்துவமனைக்கு நேரில் வரவேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ஆனால், மருத்துவ பரிசோதனை என்று அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் பல நாட்களாக மருத்துவமனையிலேயே தங்கியிருந்தததால் உடல் நலக் கோளாறு காரணமாகத்தான் சிகிச்சை பெற்று வருகிறார் என்று தகவல் பரவியது. இதனால், பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து,’வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகத்தான் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இன்னும் சில நாட்களில் வீடு திரும்பி ஆர்.கே. நகர் தேர்தல் பிரச்சாரத்தை கவனிப்பார்’ என்று தெரிவித்தார்.

இந்நிலையில் 11 நாட்களாக மருத்துவமனையில் தங்கியிருந்த விஜயகாந்த் ஏப்ரல் 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் வீடு திரும்பினார். சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு ஆர்.கே.நகர் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவார் என தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share