‘
காட்டுமன்னார்கோவில் தொகுதிக்கு விசிக கட்சி தலைவர் திருமா நன்கு அறிமுகமானவர் என்பதால் மீண்டும் அங்கு போட்டியிடுகிறார். அதிமுக-வில் சிட்டிங் எம்எல்ஏ முருகுமாறன் சம்பாதித்தப் பணத்தை செலவு செய்ய மீண்டும் அங்கு இறக்கியுள்ளார் ஜெயலலிதா. வன்னியர்கள் வாக்குகளைப் பிரித்தெடுக்க, பாமக கட்சி டாக்டர் சரவணனை வேட்பாளராக இறக்கியுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதரவாளர் மணிரத்தினம் நிறுத்தப்பட்டுள்ளார். அவர், முழுக்க முழுக்க திமுக-வையும் பணத்தையும் மட்டுமே நம்பியுள்ளார். இவர், ஏற்கனவே விசிக ஆதரவாளராக இருந்து காங்கிரஸுக்கு தாவி, அங்கிருந்து காடுவெட்டி குருவிடம் தஞ்சம் அடைந்து மீண்டும் காங்கிரஸ் பக்கம் திரும்பி இருப்பது
தொகுதிவாசிகள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளதாகப் பேசப்படுகிறது. தொகுதியில் உள்ள வாக்காளர்களைக் கூட்டிக் கழித்து, பெருக்கி வகுத்து எடுத்த ரிசல்ட்டில் மைனார்ட்டி வாக்குகள் திருமாவளவனுக்கு கைகொடுப்பதால் புதுவிதமான தெம்புடன் இருக்கிறார்கள், சிறுத்தைகளின் முகாம்களில் உள்ளவர்கள்.
