குறும்படம்: இயற்கையைப் பிரிந்த மனிதர்கள்

Published On:

| By Balaji

தம்மைச் சுற்றி இருக்கும் இயற்கை சார்ந்த விஷயங்களை ரசிக்க முடியாத இயந்திர வாழ்க்கையைத் தான் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பூக்களின் அழகு, குயில் கூவும் சத்தம், பனித்துளி படர்ந்த புல்வெளி, காற்றில் அசையும் செடி, கொடி எனப் பலர் ரசிக்கத் தவறிய இயற்கை அழகுகள் இங்கே ஏராளம். தன் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மொபைலிடம் அடகுவைத்தவர்கள் எண்ணிக்கை தற்போது அதிகமாகிவருகிறது.

இதை சித்தரிக்கும் விதமாக எடுக்கப்பட்டிருக்கும் ஒரு நிமிட குறும்படம் ‘Snap Out Of It’. ஒரு மெத்தை மீது படுத்துக்கொண்டு வெவ்வேறு கோணங்களில் மொபைலை பயன்படுத்திக் கொண்டிருக்கும் இளைஞன் சிறிது நேரம் அயர்ந்து தூங்கிவிட்டு கண்விழிக்கிறான். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதைக் கீழே உள்ள இணைப்பில் காணுங்கள்.

ADVERTISEMENT

[Snap Out Of It](https://www.youtube.com/watch?v=Eb-rMU3fMes)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share