கிரிக்கெட்: வெற்றியைக் கொண்டாடும் சென்னை

Published On:

| By Balaji

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று கோப்பையுடன் திரும்பிய சென்னை வீரர்களுக்கு நேற்று மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னதாக மும்பையிலிருந்து சென்னைக்கு வீரர்கள் ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் வந்தடைந்தனர்.

ADVERTISEMENT

விமானத்தில் வரும் வழியில் கேக் வெட்டிக் கொண்டாடினர்.

பின்னர் விமான ஊழியர்கள் கோப்பையுடன் உற்சாகமாக போஸ் கொடுத்தனர்.

ADVERTISEMENT

மீனம்பாக்கத்திலிருந்து பேருந்து மூலம் கிரவுன் பிளாசா தனியார் ஹோட்டலுக்கு வந்தடைந்தனர். அங்கும் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

திமுக தலைமைக் கழக முதன்மைச் செயலாளரான துரை முருகன் நேற்று தோனியைச் சந்தித்து சென்னை சூப்பர் கிங்ஸ் டி-ஷர்ட்டில் கையெழுத்து பெற்றுக்கொண்டார்.

ADVERTISEMENT

பின்னர் கோப்பை கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பூஜை செய்யப்பட்டது.

களத்தில் எதிரணியைக் கலங்கடிக்கும் தோனி, விமானத்தில் சாந்தமாக உறங்கிகொண்டிருக்கும் காட்சி!


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share