அரிசியை அளவாகப் பயன்படுத்துபவர்கள் ஒருபுறம் இருந்தாலும் அரிசியைத் தவிர்த்து வித்தியாசமாக ஏதேனும் முயற்சித்து பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். அந்த வரிசையில் வெண் பொங்கல், ரவை பொங்கல் எல்லாம் செய்தாகிவிட்டது. இன்று சம்பா ரவையில் வெண் பொங்கல் செய்து அசத்தலாம் வாருங்கள்.
**தேவையானவை:**
சம்பா ரவை – 200 கிராம்
பயத்தம்பருப்பு – 60 கிராம்
தேங்காய்த் துருவல் – ஒரு கப்
மிளகு, சீரகம் – 1 டீஸ்பூன்
இஞ்சி, கறிவேப்பிலை – சிறிது
முந்திரிப் பருப்பு – 4
நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு
**செய்முறை:**
முதலில் சம்பா ரவையையும் பருப்பையும் 2 ஸ்பூன் எண்ணெய்விட்டுத் தனித்தனியே சிவக்க வறுக்கவும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, பின்பு தேவைக்கேற்ப உப்பு கலந்து கொதிக்க விடவும். கொதித்ததும் வறுத்த ரவை, பருப்பைக் கொட்டி, மிதமான தீயில் வேக விடவும்
அதன்பின் வெந்ததும் நெய்யில் மிளகு, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வதக்கிச் சேர்க்கவும். முந்திரியைத் தனியே நெய்யில் வறுத்துக் கொட்டவும். மேலாகச் சிறிது நெய்விட்டுக் கிளறி இறக்கவும்.
**கீர்த்தனா சிந்தனைகள்:**
25 வயதில் சலித்து தேடுவது…
35 வயதில் தேடி சலிப்பது…
#மணப்பெண் தேடுதல்.