இன்றைய ஸ்பெஷல்: சிக்கன் தோரன்!

Published On:

| By Balaji

தேவையானவை:

சிக்கன் துண்டுகள் (சிறியதாக நறுக்கியது) – அரை கிலோ

ADVERTISEMENT

வெங்காயம் (நறுக்கியது) – 2 கப்

பூண்டு (நறுக்கியது) – 2 தேக்கரண்டி

ADVERTISEMENT

இஞ்சி( நறுக்கியது) – 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் (நறுக்கியது) – 8

ADVERTISEMENT

சிக்கன் மசாலா பொடி – 2 தேக்கரண்டி

நல்ல மிளகு (பொடி செய்தது) – 1 கப்

சீரகம் – 1 தேக்கரண்டி

தேங்காய் (துருவியது) – 1 கப்

கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை – அரை கப்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

கடுகு – 1 தேக்கரண்டி

உளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி

பிரியாணி இலை – 1

**செய்முறை**

ஒரு பெரிய பாத்திரத்தில் 3 தேக்கரண்டி எண்ணெய் எடுத்துச் சூடு பண்ணவும். அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும். இப்போது நறுக்கி வைத்த பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் (நறுக்கியது) ஆகியவற்றைச் சேர்க்கவும். நன்கு வதங்கும் வரை கிளறி விடவும். பின்னர் சிக்கன் துண்டுகளை அதனோடு சேர்த்து மெதுவாகக் கிளறிவிடவும். இப்போது சிக்கன் மசாலா, பொடித்த மிளகு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும். பின்னர் தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும். இப்போது 2 கப் நீர் சேர்க்க வேண்டும். அதோடு பிரியாணி இலை சேர்த்து பாத்திரத்தை மூடி வைத்து வேக வைக்கவும். நீர் முற்றிலும் வற்றிய பின்னர் துருவி வைத்த தேங்காயைச் சேர்க்கவும். நன்கு கிளறி சிறிது நேரம் வேகவிடவும். பின்னர் நன்கு கிளறி, கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும். இப்போது உங்களுக்குச் சுவையான சிக்கன் தோரன் ரெடி.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share