லக்னோ படுதோல்வி : ராகுலிடம் சீறிய ஓனர்… கோபத்தில் வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

Published On:

| By christopher

Owner angry with Rahul due to Lucknow's defeat against SRH

ஹைதராபாத் அணியுடன் படுதோல்வியை சந்தித்த நிலையில் லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கேஎல் ராகுலிடம் ஆவேசமாக மைதானத்திலே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சொந்த மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை நேற்று இரவு எதிர்கொண்ட ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா (75*), டிராவிஸ் ஹெட் (89) கடைசி வரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடி அணியை 9.4 ஓவரில் 167 ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தனர்.

பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான முக்கியமான போட்டியில் படு தோல்வியை சந்தித்த நிலையில், லக்னோ அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா மைதானத்தில் ரசிகர்கள் முன்னிலையில் கேப்டன் கே.எல்.ராகுலிடம் ஆவேசமாக பேசினார்.

இதனையடுத்து எல்.எஸ்.ஜி ரசிகர்கள் பலரும் கோயங்காவின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

”தோல்வியை தொடர்ந்து கே.எல்.ராகுல் பொறுப்பேற்க வேண்டியவர் தான். அதற்காக கேமிரா முன் இப்படி திட்ட வேண்டுமா?” என  ஒரு பயனர் கேள்வி எழுப்பியுள்ளார்.

”பல மோசமான சீசனை SRH எதிர்கொண்ட போதும் அந்த அணி நிர்வாகம் இவ்வாறு செயல்பட்டதில்லை. கேஎல்.ராகுல் அடுத்த வருடம் LSG அணியை விட்டு விலக வேண்டும்” என மற்றொரு பயனர் தெரிவித்துள்ளார்.

மற்றொரு பயனர், ”கேஎல் ராகுல் ஒரு டீம் இந்தியா வீரர் என்றும் அவரை மரியாதையுடன் நடத்த வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

“எனது முதலாளி என்னை இப்படி நடத்தினால், அவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும், அது என்னை வேலையில் வைத்திருக்காது. முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை இது” இணையத்தில் மற்றொரு பிரபலமான ட்விட்டர் பயனர் கூறினார்.

”ஒரு முதலாளியின் உச்சபட்ச திமிர்” என மற்றொரு பிரபல பயனர் சுட்டிக்காட்டியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

விஜய்யின் GOAT படத்தில் சிவாகார்த்திகேயன்? வைரல் நியூஸ்!

தனியாருக்கு வழங்கப்பட்ட சீருடை தைக்கும் பணி :  ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share