வார இறுதியில் தியேட்டருக்குப் போக நேரமில்லையா? கவலையே வேண்டாம். இந்த வாரம் ஓடிடி தளங்களில் ஒரு மிகப்பெரிய சினிமா திருவிழாவே நடக்கிறது. நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் என அனைத்துத் தளங்களிலும் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகும் புதுப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ!
இன்று (ஜனவரி 9) வெளியாகும் முக்கியப் படங்கள்:
1. அகண்டா 2: தாண்டவம் (Akhanda 2: Thaandavam): நந்தமுரி பாலகிருஷ்ணாவின் ருத்ரதாண்டவத்தை வீட்டில் இருந்தபடியே பார்க்கலாம். தெலுங்கில் சக்கைப்போடு போட்ட ‘அகண்டா’ படத்தின் இரண்டாம் பாகம் இன்று நெட்ஃபிளிக்ஸில் (Netflix) வெளியாகியுள்ளது. அகோரி பாலகிருஷ்ணா, உலகையே அச்சுறுத்தும் ஒரு பயங்கரமான உயிரியல் போரை (Biowarfare) எதிர்த்துப் போராடும் கதை. ஆக்ஷன் விரும்பிகளுக்கு இது ஒரு தரமான தீனி!
2. தே தே பியார் தே 2 (De De Pyaar De 2): ரொமான்டிக் காமெடி பிரியர்களுக்கு இன்று நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ளது அஜய் தேவ்கன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடித்த ‘தே தே பியார் தே 2’. முதல் பாகத்தைப் போலவே, இதிலும் வயது வித்தியாசத்தைக் கடந்த காதலும், அதைச் சுற்றி நடக்கும் கலாட்டாக்களும் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும். இம்முறை நாயகியின் பஞ்சாபி குடும்பத்தை ஹீரோ எப்படிச் சமாளிக்கிறார் என்பதே கதை.
3. மாஸ்க் (Mask) – தமிழ் த்ரில்லர்: நம்மூர் படங்களை விரும்புபவர்களுக்காக, ஜீ5 (ZEE5) தளத்தில் இன்று வெளியாகியுள்ளது ‘மாஸ்க்’. ஒரு பெரிய கொள்ளைச் சம்பவத்தில் சிக்கும் ஒரு டிடெக்டிவ், அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதைச் சொல்லும் விறுவிறுப்பான ஆக்ஷன் த்ரில்லர் இது.
4. பால்டி (Balti): கபடியை மையமாகக் கொண்டு உருவான தமிழ்-மலையாளப் படமான ‘பால்டி’, இன்று அமேசான் பிரைமில் (Prime Video) ஸ்ட்ரீம் ஆகிறது. விளையாட்டு ஆர்வலர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
நேற்று (ஜனவரி 8) வெளியானவை:
- வெப்பன்ஸ் (Weapons): திகில் விரும்பிகளே… ஒரே வகுப்பறையைச் சேர்ந்த 17 குழந்தைகள் மர்மமான முறையில் காணாமல் போகும் சம்பவத்தை மையமாகக் கொண்ட இந்த ஹாரர்-மிஸ்டரி படம், நேற்று முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் (JioHotstar) ஒளிபரப்பாகி வருகிறது.
- ஹிஸ் & ஹர்ஸ் (His & Hers): நெட்ஃபிளிக்ஸில் நேற்று வெளியான இந்தத் தொடரில், ஒரு கொலையைத் துப்பறியும் பத்திரிகையாளருக்கும் டிடெக்டிவ்வுக்கும் இடையே நடக்கும் போட்டி விறுவிறுப்பைக் கூட்டும்.
ஞாயிறு ஸ்பெஷல் (ஜனவரி 11):
- தி நைட் மேனேஜர் சீசன் 2 (The Night Manager S2): உலகமே எதிர்பார்த்த டாம் ஹிடில்ஸ்டனின் அதிரடித் தொடரான ‘தி நைட் மேனேஜர்’ சீசன் 2, வரும் ஞாயிற்றுக்கிழமை அமேசான் பிரைமில் வெளியாகிறது.
ஆக்ஷன், ரொமான்ஸ், ஹாரர் என எல்லா ஜானர்களிலும் படங்கள் குவிந்துள்ளன. உங்களுக்குப் பிடித்த படத்தைத் தேர்வு செய்து, பாப்கார்னை ரெடி பண்ணுங்க… இந்த வீக்கெண்ட் கொண்டாட்டத்தை இன்றே தொடங்குங்கள்!
