வாழை, கொட்டுக்காளி…இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ் படங்கள்!

Published On:

| By Minnambalam Login1

vaazhai kottukkaali raayan

மக்களே! இந்த வார இறுதி நாட்களில் என்ன படம் பார்க்கலாம் என்று யோசித்து கொண்டிருக்கிறீர்களா? இதோ, இன்று(ஆகஸ்ட் 23) ஒடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் திரைப்படங்களின் பட்டியல்.

திரையரங்குகள்

வாழை

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் போன்றவர்கள் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் மாரி செல்வராஜின் மனைவி திவ்யா-வின் ‘நவ்வி ஸ்டுடியோஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கும் இத்திரைப்படத்திற்குத் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கொட்டுக்காளி

பல சர்வதேச விருதுகள் வாங்கிய ‘கூழாங்கல்’ திரைப்படத்தை இயக்கிய வினோத்ராஜின் இரண்டாம் படம் ‘கொட்டுக்காளி’. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ‘எஸ்கே பிக்சர்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

சூரி, அனா பென் முதலியானோர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளரே கிடையாது. இந்த படத்திற்கு சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் கணேஷ் சிவா தொகுத்துள்ளார்.

தமிழ் திரையுலகத்தினர் வெகுவாக பாராட்டி வரும் இப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது.

போகுமிடம் வெகுதூரமில்லை

விமல், கருணாஸ் நடித்திருக்கும் இந்த படத்தை மைக்கல் ராஜா இயக்கியுள்ளார்.  டெமல் சேவியர் எட்வர்ட்ஸ ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ரகுநாதன் ரகுநாதன் இசையமைத்துள்ளார்.

ஹண்ட்

பாவனா, அதிதி ரவி, அஜ்மல் போன்றவர்கள் நடித்துள்ள இந்த திரைப்படத்தை ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ளார்.

ஒரு மருத்துவமனையைக் கதைக்களமாகக் கொண்டுள்ள இந்த திகில் படத்திற்கு கைலாஸ் மேனன் இசையமைத்துள்ளார் ஒளிப்பதிவு ஜேக்ஸன் ஜான்சன். இந்த படமும் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது.

ஓடிடி

ராயன்

தனுஷ் இயக்கத்தில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்ற படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகியுள்ளது.

டிரைவ் அவே டால்ஸ்

ஃபார்கோ, தி பிக் லெபோஸ்கி போன்ற ரகளையான திரைப்படங்களை இயக்கிய கோயன் சகோதரர்களில் ஒருவரான ஈதன் கோயன் இயக்கியிருக்கும் இந்த ஆங்கிலப் படம் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இரண்டு பெண்கள் காரில் பயணம் செல்லும் பொழுது, வழியில் குற்றவாளி கும்பல் ஒன்றை எதிர்கொள்கிறார்கள். அதற்கு பின் என்ன நடந்தது என்பது தான கதை.

ஃபாலோ கர் லோ யார்

அமேசான் பிரைமில் வெளியாகும் இந்த இந்தி ரியாலிடி தொடர், தொலைக்காட்சி நடிகை ஊர்ஃபி ஜாவேதின் வாழ்க்கையின் ஒரு பகுதியை நமக்குக் காட்டுகிறது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

கற்றது தமிழ் படத்தை வாங்கி ரிலீஸ் செய்தேன், அந்த தைரியம் யாருக்கு வரும்? – கமலுடன் ஒப்பிட்ட கருணாஸ்

Share Market : இந்திய நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய சிங்கப்பூர் அரசு!

”இனி எதிலும் கால தாமதம் ஏற்படாது” : டிஎன்பிஎஸ்சி புதிய தலைவர் வாக்குறுதி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share