தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் இன்று பிப்ரவரி 21 கடலூர் மாவட்டத்திற்கு அரசு பயணமாக செல்கிறார். other party members join dmk
இன்றும் நாளையும் கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இந்த விழாக்களில் குறிப்பாக கவனம் பெறுகிறது, நெய்வேலி சட்டமன்ற உறுப்பினரும் நெய்வேலி ஒன்றிய செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான சபா ராசேந்திரன் ஏற்பாட்டில் நடக்கும் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்வு.
அதிமுக, பாமக, நாம் தமிழர், தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து சுமார் 5000 பேர் இன்று மாலை நெய்வேலியில் சபா ராசேந்திரன் ஏற்பாட்டில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகின்றனர்.
ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சியில் இணையும் விழா என்பது அரசியலில் சகஜம்தான்.
ஆனால் இன்று நடைபெறும் 5000 பேர் திமுகவில் இணையும் இந்த நிகழ்வு ஸ்டாலினையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டது என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.
அப்படி என்ன ஆச்சரியம்?
“அதிமுக, பாமக, நாம் தமிழர், தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்களின் அவரவர் கட்சிகளில் இப்போதைய உறுப்பினர் அட்டைகள், அவர்களது ஆதார் கார்டு, அவர்களது வாக்காளர் அடையாள அட்டை, அவர்களது செல் நம்பர் என அத்தனை விவரங்களையும் ஐயாயிரம் பேருக்கும் பட்டியலிட்டு அதை ஆவணமாக்கி அறிவாலயத்தில் ஒப்படைத்து அதன் அடிப்படையிலேயே முதலமைச்சர் இடம் தேதி கேட்டார் சபா ராசேந்திரன்.
பல்வேறு மாவட்டங்களில் இதே போல மாற்றுக் கட்சிகளில் இருந்து திமுகவில் இணைகிற விழா அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது.
ஆனால் இவ்வளவு துல்லியமாக இவ்வளவு ஆதாரபூர்வமாக இவ்வளவு தெளிவான பட்டியலுடன் திமுகவில் அவர்களை இணைக்கும் நிகழ்வு சமீபத்தில் இதுதான்.
சபா ராஜேந்திரன் அளித்த இந்த பட்டியலை பார்த்து முதல்வரே ஆச்சரியப்பட்டு கடலூர் மாவட்டத்திற்கு வரும்போது இந்த இணைப்பு விழாவுக்காகவே நெய்வேலிக்கு செல்ல முடிவெடுத்து நேரம் கொடுத்திருக்கிறார்” என்கிறார்கள்.
நெய்வேலி திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, “கடலூரில் அரசு நிகழ்ச்சியை முடித்துவிட்டு இன்று மாலை முதலமைச்சர் ஸ்டாலின் இந்த இணைப்பு விழாவுக்காக நெய்வேலிக்கு வருகிறார்.
அவர் நெய்வேலிக்கு வரும்போது நெய்வேலி ஆர்ச் கேட்டில் இருந்து வரவேற்பு கொடுக்க திட்டமிட்டு இருக்கிறார் சபா ராசேந்திரன். .இதற்காக திராவிட மாடல் அரசின் பல்வேறு சாதனைகளை பதாகைகளாக தயாரித்து அவற்றை உயர்த்தி பிடித்து நீண்ட தூரம் மக்கள் சங்கிலி அமைத்து வரவேற்பு அளிக்கிறார் சபா ராசேந்திரன்.
இதற்கான ஏற்பாடுகளை கடந்த ஒரு வாரமாகவே தீவிரமாக செய்து வருகிறார்கள் நெய்வேலி திமுகவினர். other party members join dmk