திரைத்துறையில் உலகின் உயர்ந்த விருதாக கருதப்படுகிறது ஆஸ்கர். இதனை எப்படியாவது தங்கள் கைகளில் ஏந்த வேண்டும் என்பது தான் திரைத்துறைக்குள் நுழையும் பலரின் கனவாக இருக்கும். Oscar award 2025 : Here is the full list of winners!
இந்த நிலையில் தான் 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விமரிசையாக இன்று (மார்ச் 3) நடைபெற்றது. இதனை பிரபல நடிகர் கோனன் ஓ’பிரையன் தொகுத்து வழங்கினார்.
ADVERTISEMENT
இந்தாண்டு அதிகபட்சமாக ‘அனோரா’ சிறந்த படம் உட்பட ஐந்து விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. அதில், சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த ஒரிஜினல் திரைக்கதை மற்றும் சிறந்த திரைப்பட எடிட்டிங் ஆகிய பிரிவுகளில் சீன் பேக்கர் மட்டுமே நான்கு விருதுகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தி ப்ரூடலிஸ்ட் படத்திற்காக அட்ரியன் பிராடி சிறந்த நடிகராகவும், கீரன் கல்கின் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதை எ ரியல் பெயின் படத்திற்காகவும் வென்றார். அரோனா படத்தில் நடித்தற்காக மைக்கி மேடிசன் சிறந்த நடிகையாகவும், எமிலியா பெரெஸில் நடித்ததற்காக ஜோ சல்டானா சிறந்த துணை நடிகையாகவும் அறிவிக்கப்பட்டனர். இதே போன்று 23 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது.
ADVERTISEMENT
இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் ஏற்பட்ட லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயை அணைக்கப் போராடிய தீயணைப்பு வீரர்கள் கெளரவிக்கப்பட்டனர். மேலும் அதில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
2025 ஆஸ்கார் விருது வென்றவர்களின் முழு பட்டியல் பின்வருமாறு.
ADVERTISEMENT
சிறந்த படம் – அனோராசிறந்த இயக்குநர் – சீன் பேக்கர் (அனோரா) சிறந்த நடிகர் – அட்ரியன் பிராடி (தி புருடலிஸ்ட்)சிறந்த நடிகை – மைக்கி மேடிசன் (அனோரா)சிறந்த துணை நடிகர் – கீரன் கல்கின் (எ ரியல் பெயின்)சிறந்த துணை நடிகை – சோய் சல்டானா (எமிலியா பெரெஸ்)சிறந்த தழுவல் திரைக்கதை – பீட்டர் ஸ்ட்ராகன் (கான்க்ளேவ்)சிறந்த ஒரிஜினல் திரைக்கதை – சீன் பேக்கர் (அனோரா) சிறந்த அனிமேஷன் திரைப்படம் – ஃப்ளோ (ஜின்ட்ஸ் ஜில்பலோடிஸ்)சிறந்த அனிமேஷன் குறும்படம் – இன் தி ஷேடோ ஆஃப் தி சைப்ரஸ் (ஷிரின் சோஹானி மற்றும் ஹொசைன் மொலாயெமி)சிறந்த ஒளிப்பதிவு – லோல் க்ராலி (தி ப்ரூடலிஸ்ட்)சிறந்த ஆடை வடிவமைப்பு – பால் டேஸ்வெல் (விக்ட்) சிறந்த படத்தொகுப்பு – சீன் பேக்கர் (அனோரா) சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் – தி சப்ஸ்டன்ஸ் (பியர்-ஆலிவர் பெர்சின், ஸ்டீபனி கில்லன் மற்றும் மர்லின் ஸ்கார்செல்லி) சிறந்த இசை – டேனியல் ப்ளம்பெர்க் (தி ப்ரூடலிஸ்ட்)சிறந்த லைவ் குறும்படம் – ஐ அம் நாட் எ ரோபோட் (விக்டோரியா வார்மர்டாம் மற்றும் ட்ரென்ட்)சிறந்த பாடல் – எமிலியா பெரெஸில் இடம்பெற்ற “எல் மால்” (கிளெமென்ட் டுகோல் மற்றும் காமில் – இசை; கிளெமென்ட் டுகோல், காமில் மற்றும் ஜாக் ஆடியார்ட் – பாடல் வரிகள்) சிறந்த ஆவண திரைப்படம் – நோ அதர் லேண்ட் (பாசல் அட்ரா, ரேச்சல் சோர், ஹம்டன் பல்லால் மற்றும் யுவல் ஆபிரகாம்) ஆவணப்பட குறும்படம் – தி ஒன்லி கேர்ள் இன் தி ஆர்கெஸ்ட்ரா (மோலி ஓ’பிரையன் மற்றும் லிசா ரெமிங்டன்)சர்வதேச திரைப்படம் – ஐம் ஸ்டில் ஹியர் (பிரேசில்)சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – விக்ட் (தயாரிப்பு வடிவமைப்பு: நாதன் க்ரோலி; செட் டிசைன்: லீ சாண்டேல்ஸ்)சிறந்த ஒலிப்பதிவு – டூன்: பார்ட் 2 (கேரத் ஜான், ரிச்சர்ட் கிங், ரான் பார்ட்லெட் மற்றும் டக் ஹெம்பில்)சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் – டூன்: பார்ட் 2(பால் லம்பேர்ட், ஸ்டீபன் ஜேம்ஸ், ரைஸ் சால்கோம்ப் மற்றும் கெர்ட் நெஃப்சர்)