ஆஸ்கரை மிஸ் செய்த ஆல் தட் பிரித்ஸ் ஆவணப்படம்!

Published On:

| By Selvam

சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை ஆல் தட் பிரித்ஸ் ஆவணப்படம் தவறவிட்டது இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் டால்பி தியேட்டரில் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் ஷெளனக் இயக்கிய ஆல் தட் பிரித்ஸ் திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்றது. ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆவணப்படத்திற்கு விருது கிடைக்கவில்லை. சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை நாவல்னி ஆவணப்படம் தட்டிச்சென்றுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

டெல்லியில் வசிக்கும் முகமது சௌத், நதீம் ஷெகாத் முஸ்லிம் சகோதரர்கள் சுற்றுப்புறச்சூழலால் பாதிக்கப்படும் பறவைகளை காப்பாற்றுவதை அடிப்படையாக வைத்து ஆல் தட் பிரித்ஸ் ஆவணப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது.

டேனியல் ரோஹர் இயக்கிய நாவல்னி திரைப்படம் ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நாவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டது தொடர்பான கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது.

முன்னதாக ஆல் தட் பிரித்ஸ் ஆவணப்படம் சன்டான்ஸ் திரைப்பட விழாவில் உலக சினிமா கிராண்ட் ஜூரி விருது, 2022-ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப்படத்திற்கான கோல்டன் ஐ விருதை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

செல்வம்

நாகை கடலில் கச்சா எண்ணெய்: ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share