விபத்தில் சிக்கி உயிரிழந்த நபரின் உடல் உறுப்புகளை மருத்துவமனை திருடிவிட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். பாதிக்கப்பட்டவரின் தலையில் காயம் இருந்தபோதிலும், வயிற்றில் அறுவை சிகிச்சைக்கான அடையாளங்கள் இருந்ததால் குடும்பத்தினர் சந்தேகமடைந்துள்ளனர்
பாபுலா டிகல் என்ற தொழிலதிபர், அக்டோபர் 13-ம் தேதி, தனது மனைவி மற்றும் மகனுடன் பைக்கில் ராம்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, இரும்புக் கம்பிகள் ஏற்றப்பட்ட மினி லாரி மோதியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கட்டாக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அக்டோபர் 16-ம் தேதி அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதன்பிறகு டிகலின் சடலத்தை குடும்பத்தினர் வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்.
டிகலின் தலையில் ஏற்பட்ட காயங்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவரின் அடிவயிற்றில் அறுவை சிகிச்சை செய்த அடையாளங்களை குடும்பத்தினரின் கண்டறிந்தனர்.
மேலும், மருத்துவமனை நிர்வாகம் பிரேத பரிசோதனை செய்யாமல் டிகலின் உடலை குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைத்தது அவர்களுக்கு சந்தேகத்தை உருவாக்கியது.
மேலும், டிகலின் மரணம் குறித்து உள்ளூர் காவல் நிலையத்திற்கும் மருத்துவமனை தகவல் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக குடும்பத்தினருக்கு உடலுறுப்புகள் திருட்டு குறித்து சந்தேகம் அதிகரித்தது.
இந்த நிலையில் அக்டோபர் 17 அன்று காந்தமால் மாவட்டம் பாலிகுடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திகரபாஜூவில் உள்ள சவக்குழியில் டிகலின் உடலை குடும்பத்தினர் அடக்கம் செய்தனர்.
இதன்பின்னர் குடும்பத்தினர் அளித்த புகாரை தொடர்ந்து, ஒடிசா காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. மேலும், திகரபாஜூவில் உள்ள சவக்குழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட டிகலின் உடலைப் பிரேதப் பரிசோதனையும் செய்தனர்.
இதுகுறித்து பாலிகுடா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுஷாந்த் சாஹு கூறுகையில், “உடல் உறுப்பு திருடப்பட்டது குறித்து இறந்தவரின் மகனின் குற்றச்சாட்டு குறித்து விசாரித்து வருகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அனைத்து விவரங்களும் தெரியவரும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், குற்றச்சாட்டுகள் குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் முகேஷ் மஹாலிங், “யாரேனும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்துள்ளார்.
இதற்கிடையில் புகாரின் பேரில் புவனேஸ்வர் – கட்டாக் கமிஷனரேட் போலீஸ் குழு விசாரணைக்காக கட்டாக்கில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று விசாரித்து வருகிறது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா… சண்டே ஸ்பெஷல்: பாக்கெட் பொருட்கள் வாங்குபவரா நீங்கள்.. ஒரு நிமிஷம்!
டிஜிட்டல் திண்ணை: மூட்டை கட்டும் ஆர்.என்.ரவி… புதிய ஆளுநர் வி.கே.சிங்? ஸ்டாலின் வைத்த ட்விஸ்ட்!
தமிழ்த்தாய் வாழ்த்து… ஆளுநருக்கு எதிராக திமுக சட்டத்துறை கூட்டத்தில் தீர்மானம்!
சு.வெங்கடேசன் பேச்சும்… மூர்த்தி பதிலும்: என்ன நடக்கிறது மதுரை திமுக கூட்டணியில்?