இரவு நேர பிரேத பரிசோதனைக்கு அனுமதி!

Published On:

| By Balaji

உடல் உறுப்பு தானத்துக்கான பிரேத பரிசோதனைகளுக்கு முன்னுரிமை அளித்து இரவு நேரங்களில் பிரேத பரிசோதனை செய்யலாம் என்று ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் அனுமதி அளிக்க உள்ளது.

தற்போது, மருத்துவமனைகளில் பகல் நேரத்தில் மட்டுமே பிரேத பரிசோதனை நடத்தப்படுகிறது. இரவு நேரத்திலும் நடத்த அனுமதிப்பது குறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள சுகாதார பணிகள் இயக்குநரகத்தின் தொழில்நுட்பக் குழு சமீபத்தில் ஆலோசனை மேற்கொண்டது.

ADVERTISEMENT

அந்தக் கூட்டத்தில், சில நிறுவனங்கள் ஏற்கனவே இரவு நேரத்தில் பிரேத பரிசோதனை நடத்தி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டது. எனவே, இரவு நேரத்திலும் பிரேத பரிசோதனை நடத்த ஒன்றிய அரசு விரைவில் அனுமதி அளிக்கும் என்று தெரிகிறது.

தொழில்நுட்ப முன்னேற்றத்தால், பிரேத பரிசோதனைக்கு தேவையான விளக்கு ஒளி மற்றும் இதர உள்கட்டமைப்பு வசதிகள் கிடைக்கின்றன. எனவே, இரவு நேரத்தில் பிரேத பரிசோதனை நடத்துவது சாத்தியம்தான்.

ADVERTISEMENT

உரிய உள்கட்டமைப்பு வசதிகளுடன் இரவு நேர பிரேத பரிசோதனையை அனுமதிக்கும் எண்ணத்தில் ஒன்றிய அரசு உள்ளது. இதன்மூலம் உறுப்பு தானம் பெற முடியும் என்பதும் இதற்கு ஒரு காரணம். ஆதாரம் சிதைந்து போகாத அளவுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இருப்பதை மருத்துவமனை பொறுப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

அதே நேரத்தில் கொலை, கற்பழிப்பு, தற்கொலை, மர்ம சாவுகள், சிதைந்த உடல்கள் ஆகிய விவகாரங்களில் இரவு நேர பிரேத பரிசோதனை அனுமதிக்கப்படாது. மேலும், சந்தேகம் எழுவதை தவிர்க்க பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும். வழக்கு தேவைக்காக அதை பாதுகாத்து வைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

**-ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share