நெருங்கும் பருவமழை : வெள்ளத் தடுப்பு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு!

Published On:

| By Kavi

சென்னையில் வெள்ளத் தடுப்பு பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். Orders to complete flood prevention works

வரும் 24 அல்லது 25 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில் முதல்வர் ஸ்டாலின் பருவமழையையொட்டி நேற்று தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து இன்று (மே 20) சென்னையில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வால்டாக்ஸ் சாலையில் உள்ள கால்வாயில் ஆகாயத்தாமரையை அகற்றும் பணி, டெமல்லஸ் சாலையில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி, ஓட்டேரி நல்லா கால்வாயை மேம்படுத்தும் பணி மற்றும் ஓட்டேரி மெட்ரோ ரயில் நிலையக் கட்டுமானப் பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டார்.

பக்கிங்காம் கால்வாயில் ரோபோட்டிக் எக்ஸ்வேட்டர் வாகனம் மூலம் ஆகாயத்தாமரை அகற்றும் பணியையும் ஆய்வு செய்தார்.

திரு.வி.க. நகர் மண்டலம், டெமல்லஸ் சாலைப் பகுதியில் 17.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி ஆகியவற்றையும் பார்வையிட்டார்.

மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஓட்டேரி மெட்ரோ ரயில் நிலையக் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இன்றைய ஆய்வின் போது, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் அனைத்து வெள்ளத் தடுப்பு பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். அதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதல் பணியாளர்கள் மற்றும் இயந்திரங்களை கொண்டு அப்பணிகள் அனைத்தையும் விரைவில் முடிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். Orders to complete flood prevention works

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share