கல்வி நிறுவனங்களில் சாதி பெயர் : 4 வாரங்களில் நீக்க உத்தரவு!

Published On:

| By Kavi

caste names in educational institutions

கல்வி நிறுவனங்களின் பெயரில் உள்ள சாதி பெயர்களை நான்கு வாரங்களில் நீக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்துக்கு சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து அச்சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, சாதியை மையப்படுத்தும் சங்கங்களை சங்கங்களின் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா? பள்ளி கல்லூரிகளின் பெயரில் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்படுமா? என்று அரசுக்கு கேள்வி எழுப்பி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். caste names in educational institutions

இந்த வழக்கில் இன்று (ஏப்ரல் 16) தீர்ப்பு வழங்கிய நீதிபதி பரத சக்கரவர்த்தி, “சங்கங்களின் பெயரில் உள்ள சாதி பெயரை நீக்க சங்க சட்ட திட்டத்தில் திருத்தங்கள் செய்து அரசை அணுகுமாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

அப்போது, சாதிகளின் பெயரில் உள்ள சங்கங்களை பதிவு செய்யக்கூடாது என்று அனைத்து பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்று பதிவுத் தறைக்கு உத்தரவிட்டார். caste names in educational institutions

சங்கங்களின் பெயரில் உள்ள சாதி பெயரை நீக்கி சட்ட திட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு திருத்தம் செய்யாத சங்கங்களை சட்டவிரோதமான சங்கங்கள் என்று அறிவிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

சாதி சங்கங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கி சட்ட திட்டத்தில் திருத்தங்கள் செய்யும் பணிகளை மூன்று மாதங்களுக்குள் தொடங்கி ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் கூறினார். caste names in educational institutions

சாதி சங்கங்கள் நடத்தும் பள்ளி கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களின் பெயர் பலகைகளில் சாதிப்பெயர்கள் இடம் பெறக் கூடாது. கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நான்கு வாரங்களில் நீக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டார்.

அரசு நடத்தும் கள்ளர் சீர்திருத்த பள்ளி, ஆதிதிராவிட நல பள்ளி போன்ற பெயர்களை மாற்றி அரசு பள்ளி என்றே பெயர் சூட்ட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

வேறு சாதியில் திருமணம் செய்து கொண்டார்கள் என்ற காரணத்திற்காக குழந்தைகளை பெற்றோரே கொலை செய்யும் நிலை நிலவுவதாகவும் கைகளில் சாதி கயிறு கட்டிக் கொண்டு அரிவாளுடன் மாணவர்கள் வகுப்பறைக்கு வந்து தாக்குதல்கள் நடத்துவதாலும் இந்த உத்தரவை பிறப்பிப்பதாக நீதிபதி பரத சக்கரவர்த்தி குறிப்பிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share