தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி ஊதியத்துடன் விடுமுறை வழங்க இன்று (மார்ச் 29) உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க தொழிலாளர் நலத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 19ஆம் தேதியன்று விடுமுறை அளிக்க அனைத்து நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பிபிஓ நிறுவனங்களும் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, தேர்தல் நடைபெறும் நாளில் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறையை அறிவிக்க வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளில் அன்று ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Gold Rate: ஒரே நாளில் ரூ.1,120 உயர்ந்த தங்கம்… சவரன் ரூ.51,000-க்கு விற்பனை!
