வெப்ப அலை எதிரொலி : அரசு மருத்துவமனைகளில் ஓஆர்எஸ் வழங்க உத்தரவு

By Pandeeswari Gurusamy

|

Published on 27 Apr 2026, 5:01 PM

chennai imd heat increase in 2 days

தமிழகத்தில் கடும் வெப்பம் காரணமாக அனைத்து அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓஆர்எஸ் தடையின்றி வழங்க தமிழக உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் நிலவி வருகிறது. வெயில் கடுமையாக இருக்கும் பகல் நேரங்களில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் அவசியம் இன்றி வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில், வரும் மே 1-ம் தேதிக்குப் பிறகு வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதிகரிக்கும் வெப்ப அலை காரணமாக பொதுமக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதைத் தடுக்க, பொது சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ORS (உப்புச் சர்க்கரை கரைசல்) தடையின்றி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

விவசாயக் கூலித் தொழிலாளர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ORS கரைசல் வழங்க வேண்டும் என்றும், அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் இலவசமாக ORS கரைசலைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பொது மருத்துவமனைகளிலும் வெயில் பாதிப்பு சிகிச்சைக்காக ‘ஹீட் ஸ்ட்ரோக்’ என்ற சிறப்பு வார்டு அமைக்க அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஹீட் ஸ்ட்ரோக் காரணமான உயிரிழப்புகளைத் தடுக்க மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel