Netflix, amazon, Hotstar போன்ற இணையதளங்களை மக்கள் மனதில் கொண்டு போய் நிறுத்தியதற்கு மிகப்பெரும் பங்கு ஒரு சில வெப் சீரீஸ்களுக்கு உண்டு. மற்ற இணையதளங்களோடு ஒப்பிடுகையில் Hotstar மற்றும் Netflix மக்களுக்கு சற்றே பரிட்சயமானது. Netflix-இல் வெளியாகி அனைவராலும் பேசப்பட்ட ஃபேமஸ் சீரீஸ்கள் எனில் Prison Break, Arrow, Breaking Bad, Vikings, Money Heist, Spartacus, Narcos போன்ற சீரியஸ்களைத் தான் பெரும்பாலான மக்கள் பார்த்திருப்பார்கள். Friends, Bigbang theory, Sex education போன்ற சீரியஸ்களை ரசித்து பார்ப்பவர்களும் உண்டு. அவற்றைத் தாண்டி அதில் தேடித் தேடி பார்ப்பதற்கு பெரிதாக ஒன்றுமில்லை என்ற மனநிலையே மக்களிடம் உள்ளது.
பொதுவாக வெப் சீரீஸ் என்றாலே Thriller, Gangster, Historical, Fantacy, Sience fiction போன்ற கேட்டகரிக்குள் அடங்கிவிட வேண்டும். அப்போது தான் பார்வையாளர்களை கவர்ந்து அந்த சீரீஸுக்குள்ளேயே வைத்திருக்க முடியும். பார்வையாளராக நமக்கும் அது போன்ற கதைக்களங்களைத் தான் ரசிக்கவும் முடியும். அப்படிப்பட்ட நிலையில் இது போன்ற எவ்வித வட்டத்திற்குள்ளும் சிக்காத ஒரு சீரீஸ் தான் Orange is the New Black.
முழுக்க முழுக்க பெண்களை மையமாகக் கொண்ட கதைக்களம். பெண்களுக்கான சிறையில் பொதுக் குளியலறையில் இருந்து முழு நிர்வாணமாக வெளியே வரும் piper Chopman என்ற பெண்ணில் இருந்து தொடங்கும் கதை, பெண்கள் அடைக்கப்பட்டிருக்கும் சிறைவளாகத்திற்குள்ளேயே பயணிக்கும். பைப்பரும் அவரது தோழியும் ஒரினச்சேர்க்கையாளர்கள். இருவரும் பத்து வருடங்களுக்கு முன்னர் செய்த ஒரு குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர். அவர்கள் இருவரையும் சுற்றி நகரப் போகும் கதை என நினைத்து தொடரைப் பார்க்க ஆரம்பித்தோமெனில் சிறையில் உள்ள ஓவ்வொரு கைதியையும் சுற்றுகிறது கதை. சிறையில் பெண்கள். அதுவும் ஆண் காவலர்களின் கண்காணிப்பில்… யோசிக்கும் போதே மனது வேறு எங்கேயோ பயணிக்க ஆரம்பிக்கின்றது இல்லையா? ஆனால், நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் அங்கே எதுவும் இருக்காது.
இளம்வயது பெண்கள், கர்பிணிகள், வயதானவர்கள் என பலதரப்பட்ட பெண் கைதிகளின் வாழ்க்கைப் பின்னணி, அவர்கள் அந்த சிறைக்கு எப்படி வந்தார்கள். சிறையில் அவர்களின் வாழ்க்கை, ஒவ்வொரு நாளையும் எவ்வாறு கடத்துகின்றார்கள், வெளியில் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கும் உள்ளே அவர்கள் வாழ்கின்ற வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு இடைவெளி, மனித உணர்வுகளான அன்பு, தேடல், காமம், தனிமை, நட்பு, பகைமை, துரோகம் போன்ற ஒவ்வொரு உணர்வும் எவ்வளவு தெளிவாக கையாளப்படுகின்றது என்பதை காணும் போதே நம்மால் உணர முடியும். ஆணாக இருந்து பெண்ணாக மாறிய சோஃபியா என்ற கேரக்டர் முக்கியமானது. எந்த நேரமும் பரபரப்பாகவே நகரும் வகையில் திரைக்கதை கட்டமைக்கப்படும் வெப் சீரீஸ்களுக்கு மத்தியில், எவ்வித பரபரப்புமின்றி கதையோடு கதையாக சேர்ந்து பயணிக்க தயாராக இருப்பவர்கள் நிச்சயம் இந்த சீரீஸுக்குள் உங்களை நுழைத்துக் கொள்ளலாம்.
பொதுவாக சிறை என்றாலே ஆண்கள் சிறையைத் தான் பெரும்பாலும் சினிமாவில் காட்டி இருப்பார்கள். அப்படியே ஒன்றிரண்டு சினிமாக்களில் பெண்கள் சிறையைக் காட்டியிருந்தாலும் இந்த அளவுக்கு தெளிவாகவும், எதார்த்தமாகவும் காட்டியிருக்க மாட்டார்கள். முக்கியமாக பெண்களுக்கான ஒரு ஸ்பெஷல் சீரீஸ் இது. ஏதாவது ஒரு கதாபாத்திரம் நிச்சயம் உங்களை உள்ளிழுத்துக் கொள்ளும். பார்க்க நினைப்பவர்கள் பார்த்து மகிழவும். மொத்தம் 7 சீசன்கள், 91 எபிசோடுகள். ஜெயில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற கேள்விக்கான பதிலே Orange is the New Black.
[-சபரிநிவாஸ் இளங்கோவன்.](https://www.facebook.com/sabarinivas.elangovan)