ஓபிஎஸ் – டிடிவி தினகரன் சந்திப்பு: ஜெயக்குமார் காட்டம்!

Published On:

| By Selvam

ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரன் சந்திப்பு குறித்து மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பாடலை மேற்கோள் காட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று சந்தித்தார்.

ADVERTISEMENT

இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், “உண்மையான தொண்டர்களின் கீழ் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதற்காக இருவரும் சந்தித்துள்ளோம். அதிமுகவை புதுப்பொலிவுடன் நிலைநிறுத்துவோம்” என்று தெரிவித்திருந்தார்.

ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் இருவரும் சந்தித்து கொண்டதை மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பாடலை மேற்கோள் காட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “இதை பார்க்கும்போது தலைவரின் பாடலே நினைவில் வருகிறது. அன்றே கூறினார் புரட்சிதலைவர். உறங்கையிலே பானைகளை உருட்டுவது பூனைகுணம். காண்பதற்கே உருப்படியாய் இருப்பதையே கெடுப்பதுவும் குரங்குகுணம். ஆற்றில் இறங்குவோரை கொன்று இரையாற்றல் முதலைகுணம். ஆனால் இத்தனையும் மனிதனிடம் மொத்தமாய் வாழுதடா” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

ADVERTISEMENT

தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share