ADVERTISEMENT

கருப்பு பலூன்: எடப்பாடிக்கு எதிராக பன்னீர் தரப்பு ஆர்ப்பாட்டம்!

Published On:

| By christopher

எடப்பாடி பழனிசாமி வருகையை கண்டித்து சிவகங்கையில் இன்று (மார்ச் 11) ஓபிஎஸ் தரப்பினர் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாட்ட பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே எடப்பாடி பழனிசாமிக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து 300க்கும் மேற்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத்தொடர்ந்து கருப்பு நிற பலூன்களை வானில் பறக்கவிட்டு கண்டன கோஷம் எழுப்பினர்.

ADVERTISEMENT

மேலும் அங்கிருந்த போஸ்டர் மற்றும் பேனர்களிலும், ’எட்டுத்தோல்வியை சந்தித்த எடப்பாடி பழனிசாமியே அதிமுகவை விட்டு வெளியேறு’ என்ற கடுமையான விமர்சனங்களுடன் போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இது ஒருபுறமிக்க, எடப்பாடியை வரவேற்று அவரது அணியினர் மாவட்டம் முழுவதும் போஸ்டர்கள், பேனர்கள் வைத்துள்ளனர்.

ADVERTISEMENT

இப்படி ஒரே நாளில் சிவகங்கையில் அதிமுகவைச் சேர்ந்த இருதரப்பினரும் ஒரே இடத்தில் கூடியுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் போலீசாரும் அங்கு அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே இன்று காலை மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி முன்னிலையிலேயே அவரை ’துரோகி’ என்று கோஷம் எழுப்பிய அமமுகவை சேர்ந்த ராஜேஷ் விசாரணைக்குபின் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

முதன்முறையாக ஹீரோவுக்கு சமமான சம்பளம் பெற்ற பிரியங்கா சோப்ரா!

கே.ஜி.எஃப் வில்லனை வரவேற்ற விஜய்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share