முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த தர்மர் எம்.பி, இன்று (ஜனவரி 24) அதிமுக தலைமை கழகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.
ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருந்த அவரது ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக விலகி மாற்றுக் கட்சியில் இணைந்து வருகின்றனர்.
அந்தவகையில் எம்.பி தர்மர் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பல நிர்வாகிகளும் அதிமுகவில் இணைந்தனர்
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எடப்பாடி பழனிசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். என்னுடன் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக தொண்டர்கள் மீட்பு குழுவைச் சேர்ந்தவர்களும் அதிமுகவில் இணைத்துக்கொண்டனர்.
தீய சக்தி திமுக ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதற்காக அதிமுகவில் இணைந்தேன். இது தனது சுய விருப்பத்தின் பேரில் எடுக்கப்பட்ட முடிவு. யாருடனும் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை” என்று கூறினார்.
ஓபிஎஸ் உடன் இருந்த 3 எம்.ஏ.க்களில் தற்போது ஐயப்பன் மட்டுமே அவருடன் உள்ளார்
