அய்யப்பன்தமிழகத்தில் இன்றுடன் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நிறைவடையும் நிலையில், இன்று (பிப்ரவரி 20) காலை ஓ. பன்னீர்செல்வம் சபாநாயகர் அப்பாவு மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது. ங
இந்நிலையில், சட்டப்பேரவையில் பேசிய உசிலம்பட்டி தொகுதி எம்எல்ஏ அய்யப்பன், “பள்ளிக்கு வரும் பிஞ்சுக் குழந்தைகளுக்கு தாயாக இருந்து சுடச்சுட உணவு வழங்கும் காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். அவர்கள் எந்தத் தேர்தலில் ஓட்டுப் போட இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தார் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். முதல்வர் ரூ.5000 கொடுத்துவிட்டார் என்று கூப்பாடு போட்ட தலைவர்கள் எல்லாம் இன்று வரவில்லை. ஆனால் காலை உணவுத் திட்டத்தை ஏன் அவர்கள் பாராட்டவில்லை? எம்ஜிஆரின் சத்துணவுத் திட்டத்தை எப்படி இன்றும் பேசுகிறோமோ, அதுபோல காலை உணவுத் திட்டத்தைத் தமிழ்ச் சமுதாயம் இருக்கும் வரை பாராட்டிக் கொண்டே இருக்கும்.
கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்ட அரசாணையில், மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கான கள்ளர் சீரமைப்புத் துறை சார்பாக ஆசிரியர் பற்றாக்குறை உள்ள இடங்களில் பள்ளி மேலாண்மைக் குழுவே தேர்வு செய்யலாம். அதற்குரிய தொகுப்பூதிய நிதியை அரசே வழங்கும் என அரசாணை வெளியிடப்பட்டது. அதன் மூலம் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்கள் சார்பாகவும், தொகுதி மக்கள் சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
வருகின்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக மு.க. ஸ்டாலின் வர வேண்டும் என்று புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆசியோடும், புரட்சித் தலைவி அம்மா ஆசியோடும் மீண்டும் மீண்டும் வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். எங்கள் அண்ணன் ஓபிஎஸ் அவர்களின் வாழ்த்துக்களோடு , எனது தொகுதி மக்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்!” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்ல, மக்களே மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று சொல்கிறார்கள். அதனால் நிச்சயம் நான் தான் ஆட்சிக்கு வருவேன்” என்றார்.திடீரென எதிர்க்கட்சி வரிசையில் இருந்த ஓபிஎஸ் ஆதரவு தரப்பு எம்எல்ஏ அய்யப்பன், முதல்வர் ஸ்டாலின் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
