அமித்ஷாவிடம் பேசியது என்ன? டெல்லி சந்திப்பு குறித்து ஓபிஎஸ்

Published On:

| By Mathi

O Panneerselvam Amit Shah

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்து பேசியது குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) விளக்கம் அளித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார் ஓபிஎஸ். ஆனால் இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுத்து வருகிறார். இதனால் ஓபிஎஸ், தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில் டெல்லி சென்ற ஓபிஎஸ், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் பேசப்பட்ட விவரங்களை நமது மின்னம்பலத்தில் பதிவிட்டிருந்தோம்.

இந்த நிலையில் இன்று இரவு சென்னை திரும்பிய ஓபிஎஸ் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன்.தமிழகம் முழுவதும் இருக்கக் கூடிய அரசியல் சூழ்நிலைகள் குறித்து அமித்ஷாவிடம் பேசி இருக்கிறேன். இவ்வாறு ஓபிஎஸ் கூறினார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share