ADVERTISEMENT

டிஜிட்டல் திண்ணை: அமித்ஷா சந்திப்பு- ஓபிஎஸ் ‘கேம்’- உதயமாகும் ‘MGR’ கட்சி- பாஜகவுக்கு ஷாக்!

Published On:

| By Mathi

DT Amit Shah OPS

வைஃபை ஆன் செய்ததும், ”இந்த சுவர் இன்னும் எத்தனை பேரு காவு வாங்குமோ”ன்னு டயலாக் பேசியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்..

என்னய்யா சீரியஸ் டயலாக் எல்லாம் பேசுறீரு?

ADVERTISEMENT

அரசியல் கண்ணாமூச்சி ஆட்டங்கள் தான் நம்மை அப்படி பேச வைக்குதய்யா..

ரொம்ப பாவம்யா நீரு. சரி…தனிக் கட்சி தொடங்குவேன்னு சொல்லவே இல்லைன்னு ஒரே போடா போட்டுட்டாரே ஓபிஎஸ்.. என்னய்யா விஷயம்?

ADVERTISEMENT

ஓபிஎஸ் இப்படி ‘தெளிவா’ பேசுறதா காட்டிக்கிறதே டெல்லி விசிட்டுக்குப் பின்னாடிதான்.. ஓபிஎஸ்ஸின் டெல்லி பயணம் பற்றி அவருக்கு நெருக்கமான சர்க்கிளில் பேசினோம்.. அவங்க, “திருவனந்தபுரத்துல இருந்து டெல்லிக்கு போனாரு அண்ணன்.. அமித்ஷா வர சொன்னதால போய் பார்த்தாரு… அண்ணன்கிட்ட எடப்பாடியை பத்தி ரொம்பவே அதிருப்தியாதான் சொல்லி இருக்காராம் அமித்ஷா ஜி. இங்க நடக்கிற ஒவ்வொரு விஷயத்தையும் அண்ணன் அக்கு வேறா ஆணி வேறா அமித்ஷாஜி கிட்ட விளக்கமா சொன்னதை ரொம்ப கவனமா கேட்டுகிட்டாராம்.. நாம சொல்றதை முழுசா அமித்ஷா ஜி கேட்கிறாருன்னு ரொம்ப சந்தோசமா எங்ககிட்ட சொன்னாரு..” என்கின்றனர்

அமித்ஷா சந்திப்புக்கு பின்னாடிதான், தனிக்கட்சி தொடங்குறதா சொல்லவே இல்லைன்னு சொல்றாரு ஓபிஎஸ்..

ADVERTISEMENT

ஓஹோ.. அப்ப ஓபிஎஸ்-ன் உண்மையான ப்ளான் என்னய்யா?

ஓபிஎஸ்கிட்ட பண்ருட்டி ராமச்சந்திரன் போன வருஷத்துல இருந்தே தனிக்கட்சி தொடங்கிடுங்கன்னு சொல்லி பார்த்தாரு.. ஓபிஎஸ்ஸும் காசை செலவழிக்கிறது யாருன்னு காலம் கடத்துனாரு.. இப்பவும், ”எலக்‌ஷன் நோட்டிபிகேஷன் பிப்ரவரியில வந்துரும்… அப்ப போய் கட்சியை பதிவு செய்ய முடியாது.. அதனால இப்பவே கட்சியை அறிவிச்சு பதிவு செஞ்சாதான் சரியா இருக்கும்”னு பண்ருட்டியார் ஓபிஎஸ்-க்கு நெருக்கடி கொடுத்தாரு.. இதை எல்லாம் நாம் தொடர்ந்து பதிவு செய்றோம்..

இதுல புது தகவல் என்னான்னா, ஓபிஎஸ் தொடங்கப் போற கட்சி பெயரே DMK, TVK, BJP மாதிரி ‘MGR’ன்னு இருக்க போகுதாம்..

‘MGR’ன்னு வர்ற மாதிரி ஒரு கட்சியை தாம் பதிவு செஞ்சிருக்க விஷயத்தை ஓபிஎஸ் கிட்ட பண்ருட்டியார் சொல்லி இருக்காரு… இதுல ஓபிஎஸ் ரொம்ப ஹேப்பியாம்.. பண்ருட்டியார் சொன்னதை எல்லாம் கேட்டுகிட்டுதான் டிசம்பர் 15-ந் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகும்னு ஓபிஎஸ் சொன்னாரு.. இந்த நிலையிலதான் திடீர்னு டெல்லி போய் அமித்ஷாவை சந்திச்சாரு ஓபிஎஸ்..

டெல்லி அழைச்சு போனாரா ஓபிஎஸ்?

இதை பத்தி பாஜக சீனியர்கள் சிலரிடம் பேசுனப்ப, ”ஓபிஎஸ்-ன் தனிக்கட்சி மூவ் எல்லாம் உளவுத்துறை மூலமாக டெல்லிக்கு போனது.. அதுக்கு பிறகுதான்,, ரொம்ப நாளாக நம்மை சந்திக்க டைம் கேட்டுகிட்டும் இருக்காரு.. இப்ப கூப்பிட்டு பேசுனா சரியா இருக்கும்னு ஓபிஎஸ்ஸை அமித்ஷாஜி வர சொன்னாரு..

அந்த சந்திப்புல, தமிழக அரசியல் நிகழ்வுகளை பத்தி ஒவ்வொன்னா ஓபிஎஸ் சொல்ல.. எல்லாத்தையும் கேட்டுகிட்ட அமித்ஷாஜி.. அதிமுகவுல எல்லோரையும் சேர்க்கிறது பத்தி இபிஎஸ் கிட்ட பேசுறோம்னு பட்டும்படாம வழக்கம் போலதான் சொல்லி அனுப்பினாரு.. ஓபிஎஸ்தான் மலைபோல நம்பிகிட்டு பேட்டி கொடுக்கிறாரு” என்றனர்.

சரிய்யா.. வெளியே போனவங்களை மறுபடியும் அதிமுகவில் சேர்ப்பாரா இபிஎஸ்?

அதிமுகவோட பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 10-ந் தேதி நடக்குது.. இந்த பொதுக்குழுவுல முக்கியமான முடிவுகள் எடுக்கப்படுமா? இல்லையான்னு? இதுவரைக்கும் பார்ட்டி சீனியர்கள்கிட்ட இபிஎஸ் எதுவுமே கலந்து பேசலையாம்.. அதனால இபிஎஸ் குடும்ப வட்டாரங்களில் நாம பேசுனப்ப, “வெளியேத்துனவங்களை மறுபடியும் சேர்க்கிறதே இல்லைங்கிறதுல அண்ணன் (இபிஎஸ்) உறுதியா இருக்காரு.. டிசம்பர் 10 பொதுக்குழுவுலயும் இதே நிலைப்பாடுதான் இருக்கும்.. யார் என்ன சொன்னாலும் எது நடந்தாலும் இந்த முடிவுல இருந்து மட்டும் அண்ணன் பின்வாங்கவே மாட்டார்”னு சொல்றாங்க என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்குள் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share