எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்

Published On:

| By Mathi

Vaithilingam

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் இன்று ஜனவரி 21-ந் தேதி தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். திமுகவில் வைத்திலிங்கம் இணையும் நிலையில் தமது எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.

அதிமுகவின் காவிரி டெல்டா மாவட்ட முகங்களில் ஒருவராக இருந்தவர் வைத்திலிங்கம். 2011-16-ம் ஆண்டு காலத்தில் அமைச்சராக பதவி வகித்தார். அதிமுகவின் தஞ்சாவூர் தெற்கு மா.செ., அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை வகித்தார். 2016 முதல் 2021 வரை அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றினார் வைத்திலிங்கம்.

ADVERTISEMENT

அதிமுகவில் பிளவு ஏற்பட்ட போது ஓபிஎஸ் அணியில் இணைந்தார் வைத்திலிங்கம். 2026 சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதில் ஓபிஎஸ் தொடர்ந்து குழப்பமான நிலையில் இருப்பதால் அவரது அணியில் இருந்த மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஏற்கனவே திமுகவில் இணைந்துவிட்டார். திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன் தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

மனோஜ் பாண்டியனைத் தொடர்ந்து வைத்திலிங்கம் மற்றும் மற்றொரு முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட ஓபிஎஸ் அணியினர் திமுகவில் இணைய உள்ளனர். இதனால் வைத்திலிங்கம் தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

ADVERTISEMENT

சட்டப்பேரவையில் ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மற்றும் ஐயப்பன் ஆகிய 4 எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ் அணியாக செயல்பட்டனர். இவர்களில் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்ததால் ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 2 ஆக மட்டுமே உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share