எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேச்சையாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார்.
தினசரி தொகுதியில் மக்களைச் சந்தித்து பிரச்சாரம் செய்யும் ஓபிஎஸ் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.
இந்நிலையில் அரண்மனை பகுதியில் ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று (ஏப்ரல் 13) பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், “பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழகத்தில் பிடித்த முதல் தலைவர் ஓ.பன்னீர் செல்வம்தான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முழு நம்பிக்கையைப் பெற்றவரும் ஓபிஎஸ் தான்.
எப்போதும் அவர் இராமநாதபுர மக்களுக்கு ஏதேனும் செய்யவேண்டும்… தண்ணீர் பிரச்சனையை தீர்க்கவேண்டும் என்று உங்களைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டு இருப்பார்” என்று கூறினார்.
மேலும் அவர் “.முத்துராமலிங்க தேவர் தன்னுடைய சொத்துக்களை விற்று மக்களுக்கு சேவை செய்தார். அந்த வழியில் மக்களுக்கு தொண்டாற்ற இப்போது ஓபிஎஸ் வந்திருக்கிறார்.
இராமநாதபுரம் தமிழகத்தின் முதன்மை மாவட்டமாக வரவேண்டுமானால், கச்சத்தீவை நாம் மீட்டெடுக்க வேண்டுமானால் ஓபிஎஸ் பாராளுமன்றத்தில் இருக்கவேண்டும்.
தமிழக அரசியலில் இரண்டு துரோகம் நடந்துள்ளது ஒன்று கலைஞர், எம்ஜிஆரை கட்சியில் இருந்து வெளியே அனுப்பியது
மற்றொன்று எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸை கட்சியில் இருந்து வெளியே அனுப்பியது.
இவை இரண்டையும் நாம் மறந்துவிடக் கூடாது.
மோடிக்கு பதிலாக ஓபிஎஸ் ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார். அவரை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என வாக்கு சேகரித்தார்.
இன்று கொளுந்துரை, திருவரங்கம், சாம்பக்குளம், கீழத்தூவல், கீழகன்னிச்சேரி, வெண்ணீர்வாய்க்கால் ஆகிய பகுதிகளில் ஓபிஎஸ் பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், “இந்த தொகுதியில் பிரதமர்தான் நிற்பார் என்று பாஜக நிர்வாகிகள் வேலைகள் செய்து கட்டமைப்புகளை உருவாக்கினர். அவர் நிற்க வேண்டிய இந்த தொகுதியில், அவரது ஆசியை பெற்று நான் போட்டியிடுகிறேன்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“பாஜக இல்லையென்றால் ஜெயக்குமார் அவுட் ஆகியிருப்பார்” : பால் கனகராஜ்
இஸ்ரேல் மீது தாக்குதல் : ஈரானுக்கு எதிராக களமிறங்கும் உலக நாடுகள்!