பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை. இரட்டை இலை சின்னமும் கிடைக்கவில்லை, அதிக தொகுதிகளை பாஜக கூட்டணியில் எதிர்பார்த்தார், அதுவும் கிடைக்கவில்லை. கடைசியாக வேறு வழியில்லாமல் அவர் மட்டும் ராமநாதபுரம் தொகுதியில் நிற்பதற்கு முடிவெடுத்துள்ளார்.
இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் உடன் இருக்கும் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக விலகுவதற்கு ரெடியாகி வருகிறார்கள்.
பழனி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவும், ஓ.பன்னீர்செல்வம் அணியின் முக்கிய நிர்வாகியுமான சுப்புரத்தினம் திமுகவில் சேருவதற்கு அமைச்சர் ஐ.பெரியசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இதேபோல் ஓ.பன்னீர்செல்வத்தின் அணியில் இருக்கும் பலரும் இடம் மாறுவதற்காக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
IPL 2024: மொத்த அட்டவணை வெளியானது… சென்னை ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது!