டிச.15-ல் தனிக் கட்சி தொடக்கமா? நானா சொன்னேன்? ஓபிஎஸ் திட்டவட்ட மறுப்பு

Published On:

| By Mathi

O Panneerselvam

தாம் தனிக்கட்சி தொடங்குவதாக ஒருபோதும் சொல்லவே இல்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அண்மையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அவர் அறிவித்தார்.

ADVERTISEMENT

இதனையடுத்து அண்மையில் அதிமுக தொண்டர்கள் மீட்பு உரிமை குழு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் ஓபிஎஸ். அந்தக் கூட்டத்தில் பேசிய போது, அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும். டிசம்பர் 15-ந் தேதி இறுதி முடிவு எடுக்கப் போகிறோம் என ஓபிஎஸ் கூறியிருந்தார்.

அதாவது டிசம்பர் 10-ந் தேதி அதிமுக பொதுக் குழு கூடுகிறது. அந்தக் கூட்டத்தில் அதிமுகவில் மீண்டும் தம்மை இணைப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கிறார்; அப்படி அதிமுக முடிவெடுக்காவிட்டால் தனிக்கட்சி தொடங்கக் கூடும் என்பதையே மறைமுகமாக வெளிப்படுத்துகிறார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறின.

ADVERTISEMENT

இந்நிலையில் திடீரென டெல்லி சென்ற ஓபிஎஸ், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக ஓபிஎஸ் கூறியிருந்தார்.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், அதிமுகவினர் ஒன்றுபட வேண்டும் என்பதுதான் நோக்கம். தனிக்கட்சி தொடங்குவதாக நான் எப்போதும் சொல்லவே இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share