வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று (ஏப்ரல் 2) தாக்கல் செய்யப்படுகிறது. Opposition parties planned defeat
இஸ்லாம் மதத்தின் வக்ஃப் வாரிய சொத்துக்களை முறைப்படுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்காக, வக்ஃப் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு புதிய சட்டத்திருத்த மசோதா தயாரிக்கப்பட்டது. Opposition parties planned defeat
இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பாஜக எம்.பி ஜெகதாம்பிகா பால் தலைமையிலான கூட்டுக்குழுவுக்கு இந்த மசோதா அனுப்பப்பட்டது. பல மாநிலங்களுக்கு சென்று ஆலோசனை நடத்திய இந்த கூட்டுக்குழு வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது.
புதிய சட்டத்திருத்த மசோதாவின்படி, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வக்ஃப் சொத்துக்கள் மீதான வருவாய் விவரங்களை தெரிவிக்க வேண்டும், மாநில மற்றும் மத்திய வக்ஃப் வாரியங்களில் இஸ்லாமியர்கள் அல்லாத இரண்டு உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் சேர்க்கப்படுவார்கள். தணிக்கை அதிகாரம் மாநில அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு மாற்றம் செய்யப்படும் என்பன உள்ளிட்ட 44 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வக்ஃப் வாரிய மசோதாவை இன்று மதியம் மக்களவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்கிறார். மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடைபெறுகிறது. அதன்பிறகு ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்தநிலையில், எதிர்க்கட்சி தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி தலைமையில், இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று (ஏப்ரல் 1) நடைபெற்றது.
இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, மக்களவை திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா, தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே, விசிக தலைவர் திருமாவளவன் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி, ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் வக்பு மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொள்வது எனவும், மசோதாவுக்கு எதிராக வாக்களிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு பிறகு மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “வக்ஃப் திருத்த மசோதாவில் மோடி அரசாங்கத்தின் அரசியலமைப்பிற்கு விரோதமான மற்றும் பிளவுபடுத்தும் முயற்சியை தோற்கடிக்க, அனைத்து எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். Opposition parties planned defeat