மக்களவையை முதல் நாளே முடக்கிய எதிர்க்கட்சிகள்!

Published On:

| By Mathi

Mekedatu: Manickam Tagore gives notice in Lok Sabha seeking discussion

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே மக்களவையை எதிர்க்கட்சிகள் முடக்கி உள்ளன.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று முற்பகல் 11 மணிக்கு தொடங்கியது. மக்களவை கூடியதும் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டன.

ADVERTISEMENT

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நிறுத்த வேண்டும்; நெல் ஈரப்பதம் அளவை உயர்த்த வேண்டும் உள்ளிட்டவை தொடர்பான ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை ஏற்று அவையில் விவாதம் நடத்த கோரி எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் முழக்கம் எழுப்பினர். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது. இதனையடுத்து அவை நடவடிக்கைகளை பகல் 12 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.

முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய பிரதமர் மோடி, பீகார் தேர்தல் தோல்வியை ஜீரணிக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் இருக்கின்றன; நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share