ஐபோனுக்கு போட்டியா ஒரு குட்டி ‘பீஸ்ட்’ (Beast)! 200MP கேமராவுடன் வரும் ஒப்போவின் புது மாடல்… விலை இதுதானா?

Published On:

| By Santhosh Raj Saravanan

oppo reno 15 pro mini price leak 200mp camera compact phone

ஸ்மார்ட்போன் சந்தையில் எப்போதுமே பெரிய திரை கொண்ட போன்களுக்குத்தான் மவுசு அதிகம். ஆனால், கையிலடக்கமான, அதே சமயம் படுவேகமாகச் செயல்படும் ‘காம்பாக்ட்’ (Compact) போன்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. அந்தக் குறையைப் போக்க, ஒப்போ நிறுவனம் ரெனோ 15 ப்ரோ மினி‘ (Reno 15 Pro Mini) என்ற புதிய ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது.

இந்தியாவில் விரைவில் வெளியாகவுள்ள இந்த போனின் விலை மற்றும் மிரட்டலான சிறப்பம்சங்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளன.

ADVERTISEMENT

லீக் ஆன விலை விவரம்: பிரபல டெக் வல்லுநரான அபிஷேக் யாதவ் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த போனின் ரீடெயில் பாக்ஸ் விலை (Box Price) ரூ.64,999 என்று குறிப்பிடப்பட்டுள்ளது (12GB ரேம் + 256GB மெமரி). வழக்கமாக பாக்ஸ் விலையை விடக் கடைகளில் விற்கப்படும் விலை குறைவாகவே இருக்கும். அந்த வகையில், இது சுமார் ரூ.59,999 விலையில் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுக சலுகையாக வங்கி டிஸ்கவுண்ட்களும் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஏன் இது குட்டி பீஸ்ட்‘? இதன் சிறப்பம்சங்களைப் பார்த்தால், இது சாதாரண ‘மினி’ போன் இல்லை என்பது புரியும்.

ADVERTISEMENT
  • கையடக்கமான திரை: 6.32 இன்ச் AMOLED டிஸ்பிளேவுடன் வரும் இந்த போன், மிக மெல்லிய விளிம்புகளைக் (Bezels) கொண்டுள்ளது. பார்ப்பதற்கு மிகத் தெளிவாகவும், கையாள்வதற்கு எளிதாகவும் இருக்கும்.
  • கேமரா அசுரன்: பின்புறம் 200 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 50MP அல்ட்ரா வைடு மற்றும் 50MP டெலிபோட்டோ லென்ஸ் என மொத்தம் மூன்று கண்கள். முன்பக்கம் 50MP செல்ஃபி கேமரா. போட்டோகிராபி பிரியர்களுக்கு இது ஒரு விருந்து.
  • தண்ணீர் பட்டாலும் கவலையில்லை: தூசி மற்றும் நீரில் விழுந்தால் பாதுகாக்க IP66, IP68, மற்றும் IP69 என மூன்று விதமான பாதுகாப்புகளை இது கொண்டுள்ளது.

எப்போது வரும்? துல்லியமான தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும், விரைவில் ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசானில் இது விற்பனைக்கு வரும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐபோன் மினி சீரிஸை மிஸ் செய்பவர்களுக்கு, ஆண்ட்ராய்டு உலகில் இது ஒரு சிறந்த மாற்றாக அமையலாம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share