திரைப்படமாகும் ’ஆபரேஷன் சிந்தூர்’!

Published On:

| By christopher

operation sindoor will release as movie

இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றங்களுக்கு மத்தியில் ’ஆபரேஷன் சிந்தூர்’ திரைப்படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது. operation sindoor will release as movie

பஹல்காம் தாக்குதலுக்கு எதிரொலியாக கடந்த மே 7ஆம் தேதி அதிகாலை ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள ஒன்பது பயங்கரவாத தளங்களை குறிவைத்து இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியது. இதில் 70க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்து பாரம்பரியத்தில் குங்குமம் (சிந்தூர்) என்பது திருமணத்தின் போது பெண்களுக்கு கணவரால் இடப்படும் முக்கிய அடையாளமாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் பஹல்காம் தாக்குதலால் 26 பேர் கொல்லப்பட்டு, அவர்களின் மனைவிகள் குங்குமம் அழிக்கப்பட்ட நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ‘ஆபரேசன் சிந்தூர்’ பெயர் வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில் பாலிவுட்டைச் சேர்ந்த நிக்கி விக்கி பக்னானி பிலிம்ஸ் மற்றும் தி கன்டென்ட் இன்ஜினியர் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து, ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் புதிய படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இப்படம் தொடர்பான பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. அதில் துப்பாக்கியை ஏந்தியபடி நிற்கும் போர்களத்தில் நிற்கும் ஒரு பெண் சிப்பாய், தனது நெற்றியில் குங்குமம் இடுவது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகாத நிலையில், படத்தை உத்தம் மகேஸ்வரி இயக்குவார் என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share