3 பக்கமும் பாகிஸ்தான்… நடுவில் ‘இந்திய’ கிராமம்.. ஒட்டுமொத்தமாக வெளியேறிய சோகம்!

Published On:

| By Minnambalam Desk

Operation Sindoor

பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையால் இந்தியாவின் எல்லை கிராமங்களில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

ஜம்மு காஷ்மீர், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களின் எல்லைகளில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். Operation Sindoor

ADVERTISEMENT

இந்தியா- பாகிஸ்தான் இடையேயான யுத்த காலங்களில், இந்திய ராணுவம் உடனடியாக பெருமளவில் குவிக்க முடியாத எல்லைகளின் வழியே ஊடுருவி ஆக்கிரமிப்பதுதான் பாகிஸ்தானின் பாணி. Operation Sindoor

கடந்த காலங்களில் குஜராத்தின் கட்ச் எல்லையில் இதேபோன்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கையை பாகிஸ்தான் மேற்கொண்டது. குஜராத்தின் கட்ச் எல்லை என்பது பொதுமக்கள் வாழக் கூடிய நிலப் பகுதியில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த 100 கிலோ மீட்டர் தொலைவும் சதுப்பு நிலம். இது ரான் ஆப் கட்ச் என அழைக்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த சதுப்பு நிலம் மனிதர்கள் வாழத் தகுதியற்றது. இந்நிலத்தின் நடுவே செல்லும் ஒற்றைப் பாதைதான் 100 கிலோ மீட்டருக்கும் அப்பால் எல்லையை பாதுகாக்கும் விநியோகப் பாதை. ரான் ஆப் கட்ச் எல்லையானது பாகிஸ்தானுக்கு மிக அருகே உள்ளது, அண்மைக்காலம் வரை இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர்கள் யாரும் பார்வையிடாத எல்லையாகவும் இருந்ததுதான் கட்ச்.

இதற்கு நேர் எதிரான எல்லை கிராமம் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள Daoke கிராமம். இந்த கிராமத்தின் 3 பக்கங்களிலும் பாகிஸ்தான் நிலம். பாகிஸ்தானின் எல்லை வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இந்தியா- பாகிஸ்தான் போர்க் காலங்களில் கடுமையான பாதிப்புக்குள்ளாகின்ற கிராமம். இந்த கிராமத்தின் விளைநிலங்களில்தான் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டு, இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ஊடுருவாமல் தடுக்கப்படுவது வழக்கம். இதனால் போருக்குப் பின்னரும் இந்த கிராம மக்கள் வாழ்க்கை பெரும் போராட்டம்தான்.

தற்போது Operation Sindoor ராணுவ நடவடிக்கையால் Daoke கிராம மக்கள், பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். தங்களை எல்லை பாதுகாப்புப் படையினர் வெளியேற உத்தரவிடாத நிலையிலும் பாதுகாப்பு கருதியே தாங்கள் இடம் பெயருகிறோம் என்கின்றனர் இந்த கிராம மக்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share