பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தான் மீது இன்று (மே 7) அதிகாலை தாக்குதல் நடத்தியது. operation sindoor pakistan retaliates
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நீதி வழங்குவதற்காக இந்திய ஆயுதப் படைகளால் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய அரசு கூறுகிறது.
“ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு வெற்றிகரமாக அழிக்கப்பட்டன. பொது மக்களின் உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்படுவதையும், பொதுமக்கள் உயிர் இழப்பதையும் தவிர்க்க இந்த இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன” என்று இந்த ஆப்ரேஷனை நடத்தியவர்களில் ஒருவரான விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறியுள்ளார்.
மர்கஸ் அஹ்லே ஹதீஸ், பர்னாலா (லஷ்கர் இ தொய்பா)
மர்கஸ் அப்பாஸ், கோட்லி (ஜெய்ஸ் இ முகமது)
மஸ்கர் ரஹீல் ஷாஹித், கோட்லி (ஹிஸ்புல் முஜாஹிதீன்)
ஷவாய் நல்லா முகாம், முசாபராபாத் (லஷ்கர் இ தொய்பா)
சையத்னா பிலால் முகாம், முசாபராபாத் (ஜெய்ஸ் இ முகமது)
மர்கஸ் சுப்ஹான் அல்லா, பஹவல்பூர் (ஜெய்ஸ்-இ-முகமது)
மார்கஸ் தைபா, முரிட்கே (லஷ்கர்-இ-தொய்பா)
சர்ஜால், தெஹ்ரா கலான் (ஜெய்ஸ் இ முகமது)
மெஹ்மூனா ஜோயா, சியால்கோட் (ஹிஸ்புல் முஜாஹிதீன்) ஆகிய இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியிருக்கிறது.
இந்தநிலையில் இந்தியா – பாகிஸ்தானின் சர்வதேச எல்லைப் பகுதியான எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு (எல்ஓசி) அருகே பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்தியக் குடிமக்கள் 6 பேர் உயிரிழந்ததாகவும் 30க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.
பூஞ்ச், குப்வாரா மற்றும் பாராமுல்லா மாவட்டங்களில் உள்ள வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்துள்ளன.
பாகிஸ்தான் தாக்குதலை தொடர்ந்து எல்லையோர பகுதியில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
ஆபரேஷன் சிந்தூரை பிரதமர் மோடி நேற்றிரவு முதல் கவனித்து வருகிறார். பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் தொடர்ந்து ஆலோசித்து வரும் அவர், தற்போது அமைச்சரவை கூட்டத்தை நடத்தி வருகிறார். operation sindoor pakistan retaliates
