‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் தொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து பிரதமர் மோடி இன்று (மே 7) விளக்கினார். Narendra Modi meets President Murmu
பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று (மே 7) நள்ளிரவு 1.44 மணியளவில், பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாதிகள் முகாம்களை இந்திய ராணுவம் தகர்த்தெறிந்தது. இதனையடுத்து காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் மூன்று இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்தநிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாளை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், டெல்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை பிரதமர் மோடி இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது, தாக்குதலுக்கு பிறகு காஷ்மீரில் நிலவும் சூழல், மத்திய அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து திரவுபதி முர்முவிடம் பிரதமர் மோடி விளக்கினார். Narendra Modi meets President Murmu
