ADVERTISEMENT

Operation Sindoor: கந்தஹார் விமானக் கடத்தல், புல்வாமா தீவிரவாதிகள் உட்பட 100 பேர் கூண்டோடு ‘பலி’- ராணுவம்

Published On:

| By Minnambalam Desk

பாகிஸ்தான் மீதான Operation Sindoor ராணுவ நடவடிக்கையில்1999-ம் ஆண்டு கந்தஹார் விமானக் கடத்தல் மற்றும் 2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட அதிமுக்கிய பயங்கரவாதிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுவிட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Operation Sindoor ராணுவ நடவடிக்கை தொடர்பாக ஏர் மார்ஷல் ஏகே பார்தி கூறுகையில், Operation Sindoor நடவடிக்கையில் பாகிஸ்தானில் 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ADVERTISEMENT

Operation Sindoor ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டவர்களில் யூசுப் அசார், அப்துல் மாலிக் ரவூப், முதாசிர் அகமது உள்ளிட்டோர் மிக முக்கியமானவர்கள். இவர்கள்தான் 1999-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தை ஆப்கானிஸ்தானின் கந்தஹாருக்கு கடத்தி பயங்கரவாதிகளின் தலைவர் மசூத் அசாரை இந்திய சிறையில் இருந்து விடுவிக்க வைத்தவர்கள். இந்த பயங்கரவாதிகள்தான் 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் புல்வாமா தாக்குதலின் சூத்திரதாரிகள் என்றார்.

மேலும் பாகிஸ்தானின் பவல்பூர், முர்திகேவில்தான் இந்த 9 பயங்கரவாத முகாம்கள் செயல்பட்டன. இந்த முகாம்கள் மீது இந்திய விமானப் படை வீரர்கள் தாக்குதல் நடத்தினர் என்றார்.

ADVERTISEMENT

2019-ம், ஆண்டு புல்வாமா தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்திருந்தனர். Operation Sindoor தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதி அப்துல் மாலிக் ரவூப்தான், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் கமாண்டர். அமெரிக்காவால் தேடப்பட்ட சர்வதேச பயங்கரவாதி. முதாசிர் அகமது, லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் மூத்த தளபதி. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் முர்திகேவில் உள்ள லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்க தலைமை அலுவலகத்தின் பொறுப்பாளர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share