பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடுத்தது. இந்த தாக்குதலில் 9 தீவிரவாத முகாம்கள் தகர்த்தெறியப்பட்டது.
இந்தநிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளிடம் எடுத்துரைத்து ஆதரவு கோர ஏழு எம்.பி-க்கள் கொண்ட அனைத்துக் கட்சி நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவை மத்திய அரசு இன்று (மே 17) அமைத்துள்ளது.

இந்த குழுவில் திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி, காங்கிரஸ் எம்.பி சசிதரூர், பாஜக எம்.பி-க்கள் ரவி சங்கர் பிரசாத், பைஜாயந்த் பாண்டா, ஐக்கிய ஜனதா தளம் எம்.பி சஞ்சய் குமார் ஜா, தேசியவாத காங்கிரஸ் ( சரத்பவார் பிரிவு) எம்.பி சுப்ரியா சுலே, சிவசேனா எம்.பி ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு குழுவிலும் பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, ஜேடியு, என்சிபி (ஷரத் பவார் பிரிவு), பிஜேடி, சிவசேனா (யுபிடி) மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த ஐந்து முதல் எட்டு எம்.பி.க்கள் இருப்பார்கள். நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இந்த குழுவை ஒருங்கிணைக்கிறார். operation sindoor 7 mp delegation
வரும் மே 22-ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு இந்தக் குழுவானது அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்குச் செல்கிறார்கள். operation sindoor 7 mp delegation