Operation Sindhu: ஈரானில் இருந்து 1713 இந்தியர்கள் மீட்பு- மேலும் 3 விமானங்கள் இயக்கம்!

Published On:

| By Minnambalam Desk

Operation Sindhu

ஈரானில் இருந்து இந்தியர்களை மீட்கும் Operation Sindhu நடவடிக்கையில் மேலும் 3 விமானங்கள் இயக்கப்படும்; ஈரானில் இருந்து இதுவரை 1713 இந்தியர்கள் பாதுகாப்பாக டெல்லிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என மத்திய இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா தெரிவித்துள்ளார். Operation Sindhu India Iran

ஈரான் மீது இஸ்ரேல் 2-வது வாரமாக தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து தாக்கியது.

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஓமன் உள்ளிட்ட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன; மேலும் ஈரானுடன் இந்த நாடுகள் கை கோர்த்துள்ளன.

இந்த நிலையில் ஈரானில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க, Operation Sindhu நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடர்பாக மத்திய இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா கூறுகையில், ஈரானில் இருந்து மொத்தம் 1713 இந்தியர்கள் இந்தியாவுக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டுள்ளனர். Operation Sindhu நடவடிக்கையில் மேலும் 3 விமானங்கள், ஈரானில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும். ஈரானில் இருந்து எல்லை கடந்து ஜோர்டானில் தஞ்சம் அடைந்துள்ள 163 இந்தியர்களையும் மீட்டு இந்தியா அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share